தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெப்பிலியான வர்த்த நிலைய உரிமையாளர் முஸ்லிம் சமுகத்தை காட்டிக் கொடுத்துவிட்டார். ஹக்கீம் விசனம்.

Go down

பெப்பிலியான வர்த்த நிலைய உரிமையாளர் முஸ்லிம் சமுகத்தை காட்டிக் கொடுத்துவிட்டார். ஹக்கீம் விசனம்.  Empty பெப்பிலியான வர்த்த நிலைய உரிமையாளர் முஸ்லிம் சமுகத்தை காட்டிக் கொடுத்துவிட்டார். ஹக்கீம் விசனம்.

Post  ishwarya Tue Apr 30, 2013 5:18 pm

பெப்பிலியானவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது குழுவொன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதும் அதனை ஊடகங்கள் வெளிப்படையாக விமர்சித்தும் தொடர்ந்து சிலர் கைது செய்யப்பட்டிருந்ததும் யாவரும் அறிந்த விடயம். இந்நிலையில் சுமூகமாக பேசி இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதால் வழக்கை முன்னெடுக்கத் தேவையில்லை என, தாக்கப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பெப்பிலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதினான்கு பேரையும், சரணடைந்த பௌத்த பிக்குகள் மூவரையும், நுகேகொடை நீதவான் எச்சரித்து விடுதலை செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் : விட்டுக்கொடுப்பு என்பது எப்பொழுதும் ஒருதலைப்பட்சமானதாக மட்டும் இருக்கக்கூடாது. ஏனைய தரப்பினரும் இதயசுத்தியோடு நியாயமான விட்டுக்கொடுப்புகளுக்கு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து மட்டும் மேலாதிக்க மனப்பான்மையோடு விட்டுக்கொடுப்புகளை எதிர்பார்ப்பது நாட்டில் இன முரண்பாடுகளுக்கும், உரிமைப் போராட்டங்களுக்கும் வழிகோலியதை மறந்துவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

தாம் தொடர்ந்து வலியுறுத்திவருவதைப் போன்று, சட்டத்தின் ஆட்சி என்பது சமூக அந்தஸ்து, தராதரம், பாரபட்சம் பாராமல், குற்றம் இழைத்தவர்களை தீர விசாரித்து உரிய தண்டனையை வழங்குவது என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வரும் நியதியாகும் எனவும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தோனேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஹக்கீம் அந்த விட்டுக்கொடுப்பு பற்றி அங்கிருந்து கருத்துத் தெரிவிக்கும் பொழுதே மேற்கண்டவாறு கூறியதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் ஊடக ஆலோசகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் ஹக்கீம் கூறியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன,

பெருந்தன்மையை பறைசாற்றுவதற்காக குறிப்பிட்ட நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது அந்த நிறுவனத்தினர் அவ்வாறான விட்டுக்கொடுப்பை செய்ய முன்வந்திருந்தாலும் கூட, கள நிலவரத்தை பொறுத்து அவரது விட்டுக்கொடுப்பின் பின்னணியில் தலையீடுகளும், அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டிருக்கக் கூடுமென்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் மேலோங்குவது இயல்பானது.

அநீதிகளும், அநியாயங்களும் இழைக்கப்படும் போது பாதிப்புக்குள்ளாகும் சமூகங்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள் ஒரு தலைப்பட்சமான விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என மேலாதிக்கச் சிந்தனையுள்ளோர் எதிர்ப்பார்ப்பதைப் பற்றி இந் நாட்டு வரலாறு நெடுகிலும் சான்றுகள் நிறையவுள்ளன. அதேபோன்று, பொருளாதார ரீதியில் பாதிப்புக்குள்ளாகும் சமூகங்களைச் சேர்ந்த வர்த்தகர்களும் விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பதும் நியாயமற்றது.

சம்பவம் நடந்த மறுநாள் பிரஸ்தாப வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் என்னுடன் உரையாடிய பொழுது அவருக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் சில ஆலோசனைகளை வழங்க நான் முற்பட்ட பொழுது அவர் அச்ச உணர்வினால் தயக்கம் காட்டுவதாக எனக்குத் தோன்றியது.

அவரது வர்த்தக நிறுவனங்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், பாதுகாத்துக் கொள்வதற்காகவும் அவர் இவ்வாறான விட்டுக்கொடுப்புப் பற்றி சீர்தூக்கி பார்த்திருக்கக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவாக சமூகத்தின் நிகழ்கால, எதிர்கால நலன் குறித்து கரிசனை காட்டி மிகவும் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உலமாக்கள் முஸ்லிம் சமுதாயத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்! - அஸாத் ஸாலி
» முஸ்லிங்களுக்காக அமைச்சரவையை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரிக்கை!
» இப்படி பொலம்ப வச்சுட்டாங்களே, ‘குத்து’ ரம்யா விசனம்!
» இலங்கை இராணுவ அறிக்கை குறித்து அமெரிக்கா விசனம்'
» ஆட்கடத்தலை இலங்கை அரசாங்கம் அறவே சகித்துக் கொள்ளாதாம் - ஹக்கீம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum