தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாராவுடன் ரம்லத் ஒரே வீட்டில் வசிக்கலாம்; பிரபுதேவா சமரச திட்டம்

Go down

நயன்தாராவுடன் ரம்லத் ஒரே வீட்டில் வசிக்கலாம்; பிரபுதேவா சமரச திட்டம் Empty நயன்தாராவுடன் ரம்லத் ஒரே வீட்டில் வசிக்கலாம்; பிரபுதேவா சமரச திட்டம்

Post  ishwarya Sat Apr 27, 2013 6:22 pm

pirabhu-deva-familyநயன்தாரா, பிரபுதேவா காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதித்து விட்டனர். பிரபுதேவா மனைவிதான் கடுமையாக எதிர்த்தார். நயன்தாராவை பார்த்தால் அடிப்பேன் என்று எச்சரித்தார். எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பியும் மிரட்டினார். அவரை சமரசப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. நயன்தாராவை மணந்தாலும் குழந்தைகளை உன்னையும் கைவிடமாட்டேன் என்னுடனேயே வைத்துக்கொள்வேன் என ரம்லத்திடம் வாக்குறுதி அளித்தார். ஆனாலும் ரம்லத் பிடிவாதமாக மறுத்து வந்தார்.

இதனால் காதல் ஜோடி செய்வதறியாது தவித்தனர். தற்போது மனைவி எதிர்த்தாலும் பரவாயில்லை. இருவரும் சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்துள்ளனர். அதன் முதல் வெளிப்பாடாக சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த சினிமா விருது வழங்கும் விழாவில் ஜோடியாக பங்கேற்றார்கள்.

அருகருகே அமர்ந்து சிரித்து சிரித்து பேசினார்கள். விழாவுக்கு வந்த மொத்த கூட்டமும் அவர்களையே கவனித்தது. அதை பொருட்டாக மதிக்கவில்லை. நயன்தாரா கையில் புதிதாக மோதிரம் போட்டுள்ளார். அதை பிரபுதேவாதான் அணிவித்தார் என்கின்றனர்.

கையில் பிரபுதேவா பெயரை பச்சைக்குத்தி நயன்தாராவும் காதலை வெளிப்படுத்தியுள்ளார். பிரபுதேவா மகன் காலமாகி ஒரு வருடம் முடிகிறது. ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் ரம்லத்தை சமாதானப்படுத்த கடைசிகட்ட முயற்சி நடக்கிறது. இதற்காக புதிய சமரச திட்டத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார். நயன்தாராவும், ரம்லத்தும் ஒரே வீட்டில் வசிக்கலாம் என்ற அந்த சமரசதிட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரம்லத் பெயரில் சொத்துக்கள் எழுதி வைக்கவும் முடிவு செய்துள்ளராம். ஆனால் ரம்லத் இதை ஏற்பாரா? என்று தெரியவில்லை.

தற்போது பிரபுதேவாவும், நயன்தாராவும் துபாய் சென்றுள்ளனர். அங்கு நயன்தாராவின் சகோதரர் வசிக்கிறார். அவர் வீட்டில் இருவரும் தங்கினார்கள். ஷாப்பிங்கும் சென்றனர். அப்போது அவர்களை அடையாளம் கண்டு ரசிகர்கள் திரண்டனர். ஆட்டோகிராப் வாங்கினார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum