தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஞாயிற்றுக்கிழமை வருவதால் செழிப்பை தரும் விசேஷ பொங்கல்

Go down

  ஞாயிற்றுக்கிழமை வருவதால் செழிப்பை தரும் விசேஷ பொங்கல்  Empty ஞாயிற்றுக்கிழமை வருவதால் செழிப்பை தரும் விசேஷ பொங்கல்

Post  gandhimathi Mon Jan 21, 2013 6:04 pm

சூரியன் தன்னுடைய மகன் மீதான மகரத்திற்கு வரும் மங்கள நாளே மகர சங்கராந்தி எனும் பொங்கல் திருநாள். சூரியன் உத்தராணி புண்ணிய காலம் என்று சொல்லக் கூடிய கிழக்கு நேர் திசையில் பிரவேசிக்கும் தேவர்களின் விடியகாலை பொழுதில் கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கக் கூடிய ஆரம்ப நாள் குளிர்ச்சியை மாற்றி உயிரினங்களுக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய மாதமாக அமைந்துள்து மகரவீடு "தை மாதம்'' என தமிழர்களால் போற்றப்படுகிறது.

"தை மகளே வருதரணி செழிக்க தருக'' என்று ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் போற்றப்பட்ட திருவிழா பொங்கல் திருநாள் ஆகும். கதிரவன் தன் கதிர் எனும் ஆண்மையால் பூமி எனும் நில மகள் மூலம் மனிதனுக்கு தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் கிடைக்கக் கூடிய இக்கால கட்டத்தில் அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணம் என நன்றியோடு சமர்பித்து வழிபடக் கூடிய ஒப்பற்ற நன்னாள்.

தமிழர்களின் விஞ்ஞான அறிவுக்கு பொன்னான திருநாளாக அமைகிறது. மகன் தந்தை வீட்டுக்கு செல்வது ஒரு பெரும் சிறப்பு அல்ல. ஆனால் மகன் வீட்டிற்கு தந்தை வருவது மாபெரும் சிறப்பு. ஆனால் ஜோதிடத்தில் சனியும் சூரியனும் எதிர்மறையாக வர்ணிக்கப்பட்டாலும் ஆயுள் காரகனான சனியின் வீட்டிற்கு சூரியன் வருவது அனைத்து ஜீவராசிகளின் ஆயுளை நீட்டிக்கும் திருநாளாக அமைகிறது.

உடல் பலம், மனோபலம், ஆன்ம பலம், அறிவுபலம், ஐஸ்வர்ய பலம், என அனைத்தையும் தர நாளை அதிகாலை 4.47 மணிக்கு மகர வீட்டிற்கு வரும் சூரியனை தோரணங்கள் கட்டி வரவேற்று குலவை பாடி, பொங்கலிட்டு போற்றக் கூடிய இந்த திருநாள் மற்றொரு சிறப்பையும் பெறுகிறது. பூமிகாரகன் செவ்வாய் மகர வீட்டில் உச்சம் பெறுகிறார். அதே மகர வீட்டுக்கு சூரியன் வரக் கூடியநாளே உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் ஆரோக்கியத்தை தரும் நாளாக அமைகிறது.

இந்த வகையில் இந்த பொங்கல் திருநாள் செவ்வாய் சூரியனின் வீட்டிலும் குருவால் பார்க்கப்பட்டும் அதே நேரத்தில் சூரியன் வரக் கூடிய வீட்டின் அதிபதியான சனியை பார்ப்பதும் அந்த வீடே சுக்கிரனின் வீடாக அமைவதும், சுக்கிரனே தனது நண்பன் வீடான சனியின் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருப்பதும் குருகேந்திரத்தில் அமர்ந் திருப்பதும் சூரியன் தனது பாதத்தில் பிரவேசிப்பதும் சூரியன் தனுசு லக்னத்தில் மகர வீட்டில் பிரவேசிப்பதும் தனுசு லக்னத்தை குரு பார்ப்பதும் இந்த பொங்கலை சிறப்புடையதாக ஆக்குகிறது.

அந்த வகையில் பூமியின் செழிப்பு, ஆயுளின் விருத்தி சுக போகங்களின் செழுமை, ஆடம்பர வாழ்க்கை அஸ்தி வாரம், சூரியனால் அரசியல் அந்தஸ்து, அறிவுத் திறன், மதி நுட்பத்தால் புதுமையான கண்டுபிடிப்புகள் போன்றவை அனைவருக்கும் பயனுள்ளதாக அமையப் போகிறது. சூரியனின் ஆற்றலை மையமாக வைத்து அனைத்து உலக மக்களும் தேவையான உபகரணங்கள் தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டு அரசியலால் அங்கீகரிக்கக் கூடிய தன்மை இந்த பொங்கல் திருநாளுக்கு பிறகு அமையப் போகிறது. தமிழர் திருநாள் அனைவரின் மனதில் மகிழ்ச்சியை தங்க வைக்கும் என்கிறார் வாஸ்து பேராசிரியர் யோகஸ்ரீ மணிபாரதி.

வழிபாட்டு முறை....

ஒவ்வொரு ராசிக்காரர்களும் பொங்கல் வழிபாடு செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

மேஷம்:.... மேஷ ராசி அன்பர்கள் பொங்கல் படையலை வழிபாட்டு தேவதைகள் முன் வைத்து தீபராதனை செய்த பின் கிழக்கு பார்த்து சூரிய வழிபாடு செய்யலாம்.இதன் மூலம் பொறுமை, ஜஸ்வர்யம், புதிய வீடு கட்டும் யோகம் அமையும்.

ரிஷபம்:.... ரிஷப ராசி அன்பர்கள் பொங்கல் படையலை ஆராதனை செய்த பின் சூரியனை வழிபட்டு விட்டு தெற்கு பார்த்து மகா விஷ்ணுவையும், தர்ம ராஜனையும் வழிபட வேண்டும். இதன் மூலம் குடும்ப ஒற்றுமை, வம்ச வளர்ச்சி அமையலாம்.

மிதுனம்:.... மிதுன ராசிகாரர்கள் பொங்கல் படையலிட்டு சூரியனை வழிபட்ட பின் மீண்டும் ஒரு முறை மேற்கு நோக்கி வர்ண பகவானையும், சனீஸ்வரரையும், மனதில் வைத்து வழிபட வேண்டும். தொழிலில் லாபம், புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.

கடகம்:... கடக ராசி அன்பர்கள் பொங்கலிட்டு சூரியனை கிழக்கு பார்த்து வழிபட்டபின் வடக்கு பார்த்து நின்று கயிலாய நாதனை குரேபனையும் மனதில் நினைத்து வழிபட வேண்டும். இதன் மூலம் பொருளதார வலம் அதிகரிக்கும். நிம்மதி உண்டாகும்.

சிம்மம்:....சிம்ம ராசி அன்பர்கள் பொங்கல் படையலிட்டு சூரியனை வழிபட்டபின் தென் மேற்கு நோக்கி நின்று ராகு பகவானையும், விநாயகரையும் வழிபட வேண்டும். இதன் முலம் அனைத்து சுபங்களையும் பெறுவர்.

கன்னி:... கன்னி ராசி அன்பர்கள் பொங்கல் படையலிட்டு சூரியனை வழிபட்ட பின் வடகிழக்கு நோக்கி சிவ பெருமான் கால பைரவரை நினைத்து வழிபட்டால் குடும்ப ஒற்றுமை, நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்:...துலாம் ராசி அன்பர்கள் பொங்கல் படையலிட்டு சூரியனை வழிபட்டபின் தென் கிழக்கு பார்த்து பரா சக்தி, மதுரை மீனாட்சியை மனதில் நினைத்து வழிபாடு செய்வதன் மூலம் மேன்மை அடையவர். தொழிலில் லாபம் பெருகும்.

விருச்சிகம்:... விருச்சிகம் ராசி அன்பர்கள் பொங்கலிட்டு சூரியனை வழிபட்ட பின் வட மேற்கு நோக்கி முருகப் பெருமான் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து வழிபட்டால் குடும்பத்தின் மீது அன்பு அதிகரிக்கும் நண்பர்கள் உதவி கிடைக்கும்.

தனுசு:... தனுசு ராசி அன்பர்கள் பொங்கல்படையலிட்டு சூரியனை வழிபட்ட பின் வடக்கு திசை பார்த்து தட்சிணாமூர்த்தி, திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்து வழிபட்டால் கல்வியில் மேன்மை கடன் தொல்லை நீங்கும்.

மகரம்:.... மகர ராசி அன்பர்கள் பொங்கல் படையலிட்டு சூரியனை வழிபட்டு மேற்கு திசை நோக்கி ரங்கநாதர் மகா விஷ்ணுவை வழிபட்டால் அரசு ஆதரவு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


கும்பம்:... கும்ப ராசி அன்பர்கள் பொங்கலிட்டு சூரியனை வழிபட்ட பின் வடக்கு திசை நோக்கி தட்சிணாமூர்த்தியை மனதில் நினைத்து வழிபட்டால் ஞானம் உண்டாகுதம். காரிய தடைகள் நீங்கும்.

மீனம்:... மீன ராசி அன்பர்கள் பொங்கலிட்டு சூரியனை வழிபட்ட பின் தெற்கு நோக்கி நின்று திருப்பதி ஏழுமலையானை மனதில் நினைத்து வழிபட்டால் நினைத்த காரியம் பலிக்கும். புகழ், பொறுமை உண்டாகும்.

யோகம் தரும் மண்பானை.....

பண்டைய காலங்களில் மட்டும் அல்லாது நடை முறை காலங்களிலும் நாம் சூரியனை போற்றுவதற்காக சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக கண்ணால் பார்க்கக் கூடிய கடவுளாக சூரியன் இருக்கிறார். சூரியனின் கதிர்கள் பூமியை தீண்டுவதால் உயிரினங்கள் ஆரோக்கியமாகவும், தத்தமது வம்ச வளர்ச்சியுடனும் வாழ் வாங்கும் வாழ்கின்றன.

இதற்கு அடிப்படையாக நீர், நெருப்பு, காற்று, துணையாக இருப்பதை நாம் நன்கு அறிவோம். ஆகாயத்தில் இருந்து சூரியனும், பூமியில் மண், நீர், நெருப்பு, காற்று எனும் 5 பூதத்தின் சிலையை மண்பானை எனும் தத்துவத்தில் தந்துள்ளார்கள் நம் முன்னோர்கள். மண்ணை நீர் கொண்டு பிசைந்து நெருப்பில் கட்டு காற்றின் மூலம் நீரை வெளியேற்றி பயன்தரும் பானையாக உருவாக்கினார்கள்.

(சாதாரணமாக தண்ணீரில் பிசையப்பட்ட மண் உருக்குலைந்து விடும்) வாழ்க்கை எனும் சக்கரத்தின் மையப் புள்ளியில் மண் எனும் உடம்பை நீர் கொண்டு தழுவினால் மனம் எனும் பானை உருவாகும். அதை துன்பம் எனும் நெருப்பில் சுடும் பொழுது காற்று எனும் காந்தத்தால் ஆகாயம் எனும் இறைவனோடு ஒன்றும் பொழுது மனிதனின் மனம் உடையாமல் காப்பாற்றப்படும்.

மண் எனும், உயிர் எனும் வாய், நெருப்பு உடல் எனும் கண்கள், காற்று எனும் மூக்கு, ஆகாயம் எனும் காதுகள் இந்த ஜம்புலன்களையும் நாம் இந்த மண்பானை வாயிலாக காண்கிறோம். ஆக இந்த ஜம்புலன்களையும் ஒரு நிலைப்படுத்தி பொங்கலிடும் போது நமது மனித குளத்திற்கு உண்டான பிரபஞ்ச செய்திகள் சூரியா தினம் எனும் ஆன்டெனா மூலமாக செவிக்கும் ஆகாயத்தின் ரகசியங்கள் சொல்லித்தரப்படுகிறது.

இந்த தத்துவத்தை இந்த நாளில் நாம் பொங்கல் வைப்பதன் மூலம் பெற்றுக் கொள்கிறோம். "தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்று இதன் அடிப்படையில்தான் சொல்லப்படுகிறது. எனவே மண்பானையில் பொங்கலிடுவது மிகவும் சிறப்புடையதாகும். என்கிறார் வாஸ்து பேராசிரியர் யோகஸ்ரீ மணிபாரதி.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum