தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா – நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ்

Go down

ரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா – நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ் Empty ரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா – நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ்

Post  ishwarya Wed Apr 24, 2013 12:14 pm



மனைவி உயிருடன் இருக்கும்போது கள்ளத்தனமான காதலியுடன் ஊர்சுற்றுவதும், திருமணம் செய்யப் போவதாக பகிரங்கமாக கூறுவதும் சட்டப்படி குற்றமாகும். எனவே நடிகர் பிரபுதேவா மீது அவரது மனைவி புகார் கொடுத்தால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ரமலத்தை ஓரம் கட்டி விட்டு நயனதாராவை தனது 2ம் தாரமாக ஆக்கிக் கொள்ள தீர்மானித்து விட்டார் பிரபுதேவா. இதை பகிரங்கமாகவும் அறிவித்து விட்டார். இதுகுறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை, இது தனது தனிப்பட்ட விஷயம் என்றும் அவர் கூறி விட்டார்.

ஆனால் தற்போது பிரபுதேவா விவகாரம் சட்டரீதியில் பல பிரச்சினைகளை சந்திக்க ஆரம்பித்துள்ளது.

பிரபுதேவாவுக்கு ரமலத் என்ற மனைவி உள்ளார், உயிருடன் உள்ளார். அவர் உயிருடன் இருக்கும்போது, பிரபுதேவா 2வது திருமணம் செய்ய முடியாது. ஒன்று விவாகரத்து செய்ய வேண்டும், அல்லது மனைவியின் எழுத்துப்பூர்வமான சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டும். இந்த இரண்டையும் செய்யாமல் அவர் நயனதாராவை கல்யாணம் செய்தால் அது சட்டவிரோத திருமணமாகி விடும்.

முதல் மனைவி குத்துக்கல்லாக இருக்கும்போதே, தனது காதலியுடன் ஊர் சுற்றி வருகிறார் பிரபுதேவா. மேலும் அவரை கல்யாணம் செய்யப் போவதாகவும் கூறி வருகிறார். இது சட்டவிரோதமானது என்று காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள்.

இவ்வாறு பகிரங்கமாக பேசுவது தவறானது, குற்றச் செயலாகும். பிரபுதேவாவின் மனைவி ரமலத் இதுகுறித்து போலீஸாரிடம் முறைப்படி புகார் கொடுத்தால், நிச்சயம் பிரபுதேவாவைக் கைது செய்ய முடியும். புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.

ஆனால் ரமலத் புகார் கொடுப்பாரா என்பது தெரியவில்லை. அவர் தரப்பில் பெருத்த மெளனமே காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென ரமலத் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து மேற்கு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு பத்திரிக்கையாள்கள் விரைந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை. போலீஸாரும் விரைந்து வந்து விசாரித்தனர். அதில், ரமலத் வெளியில் சென்றிருப்பதாகவும், அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தற்போதைய நிலையில் ரமலத்தை பெரும் தொகை கொடுத்து சரிக்கட்டும் முயற்சியில் பிரபுதேவா தரப்பு படு தீவிரமாக இறங்கியிருப்பதாக தெரிகிறது. என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் ரமலத்தும் பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பிரபுதேவா – நயனதாரா கல்யாணத்திற்கு மனைவி ரமலத் சம்மதம்?
» ரமலத் தொடர்ந்த வழக்கு-நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
»  தயாரிப்பாளர் கேயார் தலைமையில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நடவடிக்கை கோரி புகார்
» நடிகை அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் போலீஸ் கமிஷனரிடம் புகார்
» வன்கொடுமை சட்டத்தின் கீழ் சின்மயி மீது நடவடிக்கை எடுங்கள்! – அம்பேத்கர் பாசறை கமிஷனரிடம் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum