தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர், நடிகைகளுக்கு தமன்னா வேண்டுகோள்: தரமற்ற பொருட்களின் விளம்பர படங்களில் நடிக்க கூடாது

Go down

நடிகர், நடிகைகளுக்கு தமன்னா வேண்டுகோள்: தரமற்ற பொருட்களின் விளம்பர படங்களில் நடிக்க கூடாது Empty நடிகர், நடிகைகளுக்கு தமன்னா வேண்டுகோள்: தரமற்ற பொருட்களின் விளம்பர படங்களில் நடிக்க கூடாது

Post  ishwarya Tue Apr 23, 2013 5:42 pm

நடிகர், நடிகைகள் விளம்பர படங்களில் நடித்து சம்பாதிக்கின்றனர். ஓரிரு நாள் நடிப்பதற்கு ஒரு கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

இன்று நடிகர், நடிகைகள் சிலர் தரமற்ற விளம்பர படங்களில் நடிப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அவர்கள் விளம்பர படுத்தும் பொருட்களை பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல் வெளி யாகி உள்ளது.

இது பற்றி தமன்னா விடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

நடிகர்- நடிகைகள் சமூ கத்தில் பிரபலமான நபர்கள். எனவே அவர்களுக்கு சமூக பொறுப்புணர்வு இருக்கிறது. விளம்பர படங்களில் நடிப்பதில் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் விளம்பரபடுத்தும் பொருட்களை பொதுமக்கள் நம்பி வாங்குகிறார்கள்.

எனவே நடிகர்-நடிகை கள் விளம்பரபடுத்தும் பொருட்கள் தரமானவை தானா? என்று ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற பொருட்களை விளம்பர படுத்தும் படங்களில் நடிக்க கூடாது நான் விளம்பரப்படுத்தும் பொருட்களை முதலில் நானே பயன்படுத்தி பார்க்கிறேன். அது நல்ல பொருள் என்று திருப்தி ஏற் பட்டால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன். ஒரு சிறிய தவறு நடந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum