தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினி விருந்தும் அறிவிப்பும்… ‘கெட் ரெடி ஃபோக்ஸ்!’

Go down

ரஜினி விருந்தும் அறிவிப்பும்… ‘கெட் ரெடி ஃபோக்ஸ்!’ Empty ரஜினி விருந்தும் அறிவிப்பும்… ‘கெட் ரெடி ஃபோக்ஸ்!’

Post  ishwarya Tue Apr 23, 2013 5:39 pm

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது அடுத்த படம் சத்யா மூவீசுக்கு என்பதை முடிவு செய்து, கதையைத் தயார் செய்யச் சொல்லிவிட்டுத்தான் இமயமலைக்குப் பயணமாகியிருக்கிறார்.

சத்யா மூவீஸ் அலுவலகம் இப்போதே கல்யாண வீட்டு எஃபெக்டுடன் ரஜினி படத்துக்கான ஏற்பாடுகளில் பரபரத்துக் கொண்டிருக்கிறது. இப்போதே வடக்கிலிருந்து ஏகப்பட்ட விசாரணைகளாம்.

இமயமலைக்குச் சென்றிருக்கும் ரஜினி, இன்னும் மூன்று வாரங்கள் கழித்து சென்னைக்குத் திரும்புகிறார்.

வந்ததும் அவரது முதல் வேலை, சௌந்தர்யா கல்யாணம், எந்திரனின் மெகா வெற்றி ஆகியவற்றுக்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பதுதான் என்கிறார்கள். கூடவே, கஷ்டப்படும் சில ரசிகர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவி, திருமண உதவி என்று அவரது உதவிப் பட்டியல் நீள்கிறது.

“எதைச் செய்தாலும் மனசார, நிறைவாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர் ரஜினி. அரைகுறையாக ஒரு விஷயத்தைச் செய்யப் போய், அது தனக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அவர் போட்டுக் கொடுத்த பிளான்படி விருந்து நிகழ்ச்சி நிறைவேறினால், இந்தியாவே மலைத்துப் போகும் அளவு சிறப்பான நிகழ்வாக அது அமையும்”, என்கிறார் மண்டபப் பிரமுகர் ஒருவர்.

இந்த விருந்தின் போதே, தனது அடுத்தபட அறிவிப்பு மற்றும் சில திட்டங்கள் குறித்தும் அறிவிக்கப் போகிறாராம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராணா.. செட்டுகள் அமைக்கும் பணி தீவிரம்… வெளிநாட்டு பயணத்துக்கு ரஜினி ரெடி!
» த்ரிஷாவுக்கு ‘கெட் அவுட்’-எமிக்கு ‘வெல்கம்’!
» ‘ரஜினி உங்களைச் சந்திப்பார்… ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!’ – லதா ரஜினி
» இது ரஜினி சாங்… சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» விஜய்யின் விருந்தும் விருதும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum