தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உத்தமபுத்திரன் – ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

Go down

உத்தமபுத்திரன் – ஸ்பெஷல் ஹைலைட்ஸ் Empty உத்தமபுத்திரன் – ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

Post  ishwarya Tue Apr 23, 2013 4:19 pm

செல்வராகவனின் உதவியாளர் ஜவஹர் மித்ரன் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் உத்தமபுத்திரன். ஏற்கனவே யாரடி நீ மோகனி, குட்டி என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த இந்த கூட்டணி இப்படத்தில் கூட்டுக்குடும்பம், மனித உணர்வுகளை பதிவு செய்திருக்கிறதாம். உத்தமபுத்திரன் பற்றிய ஸ்பெஷல் ஹைலைட்ஸ் வருமாறு:

* ரெடி என்ற தெலுங்கு படத்தின் ரீ-மேக் தான் உத்தமபுத்திரன்.

* படத்தில் சிவா என்ற கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். பூஜா என்ற கேரக்டரில் ஜெனிலியா மிக யதார்த்தமாக நடித்துள்ளார்.

* கூட்டுக்குடும்ப வாழ்க்கை குறைந்து போன நிலையில், அண்ணன், தம்பி, சொந்த பந்தங்களோடு எப்படி வாழ வேண்டும் என்பதை நகைச்சுவை இழை ஓட, குடும்ப கதையாக, அழகாக காட்சியமைத்து இருக்கிறார் இயக்குனர்.

* படத்தில் மொத்தம் 32க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பாக்யராஜ், அம்பிகா, ரேகா, கருணாஸ், ஸ்ரீநாத், ஆர்த்தி, மயில்சாமி உள்ளிட்டவர்கள் அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.

* ஒவ்வொரு பிரேமிலும் குறைந்தது 10 ஆர்ட்டிஸ்ட்கள் இருப்பார்களாம்.

* திருநெல்வேலி, பழனி, குற்றாலம், சென்னையில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். சுவிஸ் மற்றும் இத்தாலியில் பாடல்காட்சிகளை படமாக்கியுள்ளனர். பழனியில் மட்டும் 1 மாதம் சூட்டிங் நடந்திருக்கிறது.

* தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியாக இருக்கும் ஆஷிஸ் வித்யார்த், ஜெயப்பிரகாஷ் ரெட்டி ஆகியோர் உத்தமபுத்திரனுக்கு கூடுதல் பலம் தருவார்கள் என்கிறார் டைரக்டர் ஜவஹர்.

* மொத்தம் 84 நாட்கள் சூட்டிங்கை நடத்தியுள்ளனர். அதில் க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் 138 ஆர்ட்டிஸ்ட்களுடன் 3 நாட்கள் எடுக்கப்பட்டுள்ளது.

* பின்னணி இசை சேர்ப்புக்கு மட்டும் விஜய் ஆண்டனி 1 மாத காலம் எடுத்துக் கொண்டு, கதையின் இயல்பில் இருந்து மீறாமல் இசையை நவரசமாக அமைத்துக் கொடுத்திருக்கிறாராம்.

* என்னதான் குடும்ப கதையாக இருந்தாலும், உத்தமபுத்திரன் படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் போன்ற வில்லன்களும் உண்டாம்.

* ஜவஹர் – தனுஷ் கூட்டணியில் உத்தமபுத்திரனும் எதிர்பார்ப்புக்குரிய படமாக தீபாவளி ரீலிசுக்கு தயாராக நிற்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum