தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் சுத்தமான தமிழ்ப் பெண் – கூறுகிறார் ஃபிரன்ட்ஸ் விஜயலட்சுமி

Go down

நான் சுத்தமான தமிழ்ப் பெண் – கூறுகிறார் ஃபிரன்ட்ஸ் விஜயலட்சுமி Empty நான் சுத்தமான தமிழ்ப் பெண் – கூறுகிறார் ஃபிரன்ட்ஸ் விஜயலட்சுமி

Post  ishwarya Tue Apr 23, 2013 2:25 pm

ஏராளமான கன்னடப் படங்களில், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலான தமிழ்ப் படங்களிலும் நடித்தவரான விஜயலட்சுமி இப்போது டிவி நடிகையாகி விட்டார்.

கன்னடத்தில் ஒரு காலத்தில் பிசியாக இருந்தவர் விஜயலட்சுமி. பின்னர் தமிழில் ஃபிரன்ட்ஸ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென எந்த மொழிப் படத்திலும் நடிக்கவில்லை.

இடையில் டிவி சீரியல் ஒன்றில் நடித்தார். பிறகு டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து அளித்தார். அப்போது சில சர்ச்சைகள் எழவே அதிலிருந்தும் மாயமானார். இந்தநிலையில் மீண்டும் டிவி ரியாலிட்டி ஷோ மூலம் திரம்பி வந்துள்ளார் விஜயலட்சுமி.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் ஒரு சுத்தமான தமிழ்ப பெண்தான். சென்னையில்தான் பிறந்தேன். கர்நாடகத்தில் படித்தேன். அங்கு பட வாய்ப்புகள் வரவே அங்குசில காலம் செட்டிலாகி விட்டேன். ஆனாலும் எனது இதயம் தமிழுக்காகவே துடித்துக் கொண்டிருந்தது.

இப்போது கடந்த ஐந்து வருடங்களாக நான் சென்னையில்தான் வசித்து வருகிறேன். இங்கேயே செட்டிலாகப் போகிறேன் என்றார்.

சரி உங்களுக்கு கல்யாணமாகி விட்டதாமே என்று கேட்டால், பளபளவென வாய் விட்டுச் சிரித்தார் விஜயலட்சுமி. நான் நீண்ட காலமாக கோலிவுட்டில் இல்லாததால் பலரும் நான் கல்யாணமாகி செட்டிலாகி விட்டதாக கூறத் தொடங்கி விட்டனர். உண்மையில் நான் இன்னும் சிங்கிள்தான். தொடர்ந்து நடிக்க காத்திருக்கிறேன், நடித்துக் கொண்டும் இருக்கிறேன் என்கிறார் விஜயலட்சுமி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் கவர்ச்சியாக நடிக்ககூடாதா? விஜயலட்சுமி கேள்வி
» நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்
» நான் ஒரு ஊனமுற்ற பெண்.
» சுறாவில் வருவதுபோல நான் முட்டாள் பெண் அல்ல! – தமன்னா
» நான் குடும்பப் பெண்… நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! – ஐஸ்வர்யா ராய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum