தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு அதிகம்

Go down

பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு அதிகம் Empty பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு அதிகம்

Post  meenu Mon Jan 21, 2013 2:25 pm

தற்போதுள்ள காலகட்டத்தில் ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர்.

திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணை விட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர்.

இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர்தான்.ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்டவேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது.

இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது. பெண்கள் ஆண்களை சார்ந்தும், ஆண்கள் பெண்களைச் சார்ந்தும் வாழ்வது தான் உலக நியதி என்பதை இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்!
» இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் சல்மான்கான்: சம்பளம் ரூ.18 கோடி படத்தின் லாபத்திலும் பங்கு கேட்கிறார்
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க
» பெண்கள் வாழ்க்கையில் விவாகரத்து ஏற்படுத்தும் பாதிப்பு
» சாப்பாட்டை அதிகம் விரும்பும் பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum