தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவில் பெண்களின் நிலை

Go down

இந்தியாவில் பெண்களின் நிலை Empty இந்தியாவில் பெண்களின் நிலை

Post  meenu Mon Jan 21, 2013 2:11 pm

இந்தியாவில் பெண்களின் நிலை என்று கேட்ட உடனேயே இந்தியர்கள் அனைவரும், எங்கள் நாட்டில் தான் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம். பூமி முதல் ஆறு, கடல் வரை அனைத்திலும் பெண் வடிவத்தைக் காண்கிறோம். பெண்களுக்கும் வாக்களிக்க உரிமை அளித்திருக்கும் வளரும் நாடுகளில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டமும் பெண்களுக்கு சரிசமமான வாய்ப்புகளையும், உரிமைகளையும் வழங்குகிறது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு உதவி அமைப்பு இந்தியாவில் பெண்களின் நிலைப் பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு, இந்திய அரசு அளிக்கும் அறிக்கைகள், உள்ளூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, ஊடகங்களில் தினமும் வரும் செய்திகளை வைத்து இதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நாம் பெண்களைப் பற்றிக் கூறுவத‌ற்கு எதிராகவே உள்ளது. அந்த பட்டியலில், பெரும்பாலான நாடுகளில் காணப்படுவதைப் போல் அல்லாமல் இந்தியாவில் ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.

அதாவது 1000 ஆண்களுக்கு 927 பெண்கள்தான் இந்தியாவில் உள்ளனர். இதற்குக் காரணம் உலகத்தைக் காண்பதற்கு முன்பே பெண் குழந்தைகள் கரு‌விலேயே அழிக்கப்படுவதுதான். ஆண் குழந்தையை விட பெண் குழந்தைக்கு சத்துணவு குறைவாகவே கிடைக்கிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பலவீனமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அற்றவர்களாகவும் உள்ளனர்.

குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்ட பின்னர் கடைசியாகவும், மீதமிருப்பதையும் உண்ணும் நிலையில் பல பெண்கள் உள்ளனர். இந்தியாவில் சராசரிக்கும் அதிகமான பெண்கள் தங்களது 22 வயதுக்குள்ளாகவே முதல் குழந்தையைப் பெற்று விடுகின்றனர். கருத்தடைக்காக பெண்கள் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்வதும், மருந்துகள் உண்பதுமாக உள்ளனர்.

இந்தியாவில் 65.5 விழுக்காடு ஆண்கள் படிப்பறிவு பெறும் நிலையில் 50 விழுக்காடு பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெறுகின்றனர். அப்படியே படித்தாலும், பள்ளியோடு பெரும்பாலான பெண்களின் படிப்பறிவு முடிந்து போகிறது. வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு பெண்கள் பணியமர்த்தப்படுகின்றனர். வீடுகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிக மணி நேரங்கள் வேலை செய்கின்றனர்.

சம்பளமும், அங்கீகாரமும் இன்றி எத்தனையோ பெண்கள் வீடுகளில் அடிமைகளைப் போல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆணும், பெண்ணும் பணியாற்றும் ஒரே நிறுவனத்தில் ஆணை விட பெண்ணுக்குக் குறைந்த சம்பளமே அளிக்கப்படுகிறது. ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் இருவருக்கும் சமமான கூலி அளிக்கப்படுகிறது. அது விவசாயத்தில் மட்டும்தான்.

பல்வேறு இடங்களில் முடிவுகளை தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. பல குடும்பங்களில் பெண்களுக்கு என எந்த சொத்தும் இருப்பதில்லை. அதேப்போன்று பெற்றோரது சொத்தில் எந்த பங்கும் அளிக்கப்படுவதுமில்லை. எத்தனையோ பெண்கள் வீட்டிலும், வீட்டிற்கு வெளியேயும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கு ஆளாகுகின்றனர். காவல்துறை புள்ளி விவரத்தில், இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 26 பெண்கள் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர்.

ஒவ்வொரு 34 நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள், ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும் ஒரு பெண் உடல் வன்முறைக்குள்ளாகிறாள், ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார், ஒவ்வொரு 93 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. கணக்கில் வந்ததே இப்படி என்றால் கணக்கில் வராதது எவ்வளவோ...
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் பெண்களில் நிலை
» பெண்களின் நிலை
» காதலருடன் ஓடிப்போகும் பெண்களின் நிலை
» நடைமுறையில் பெண்களின் பாதுகாப்பற்ற நிலை
» பெண்களின் மாதவிலக்கு சுழற்சி சிக்கலானது. ஆயுர்வேதத்தில் ரத்த பிரதார என்று அதிக உதிரப்போக்கு குறிப்பிடப்படுகிறது. நோயாளியின் ப்ரக்ருதி முதலில் கண்டுபிடிக்கப்படும். அவர்களின் தற்போதைய ஆரோக்கிய நிலை பரிசோதிக்கப்படும். பிறகு பஞ்ச கர்மா சிகிச்சை ஆரம்பிக்கப்படு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum