தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கிலும் தோல்வி! ஸ்ருதி ஹாசன் அப்செட்!!

Go down

தெலுங்கிலும் தோல்வி! ஸ்ருதி ஹாசன் அப்செட்!! Empty தெலுங்கிலும் தோல்வி! ஸ்ருதி ஹாசன் அப்செட்!!

Post  ishwarya Sat Apr 20, 2013 2:14 pm

இந்திய திரையுலகில் சகலகலா வல்லவனாக திகழ்ந்து வரும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் நடித்த படமும் தோல்வியடைந்து விட்டது. இதனால் ஸ்ருதியும், அவரை வைத்து அடுத்து படமெடுத்து வரும் டைரக்டர் முருகதாசும் கொஞ்சம் கலக்கம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் மகள் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விருப்பமில்லை; திரையுலகில் எனது திறமைகளை காட்டி வெற்றி பெறுவேன் என்று தன்னம்பிக்கை வசனங்களை ‌தைரியமாக பேசி வரும் ஸ்ருதி, லக் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படம் ஸ்ருதிக்கு லக் ஆக அமையவில்லை. இதையடுத்து அவர் அகநக ஓ தீரடு என்ற தெலுங்கு படத்தில் கமிட் ஆனார். படத்தின் ரிசல்ட்டை ரொம்பவே ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த ஸ்ருதிக்கு அடிமேல் அடி இடியாக வந்து விழுந்திருக்கிறது. ஆம்..! தெலுங்கிலும் ஸ்ருதியால் ஜெயிக்க முடியவில்லை.

அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்திருக்கும் ஸ்ருதி அடுத்து நடித்து வரும் படம் ஏழாம் அறிவு. டைரக்டர் முருக‌தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தையும் ஸ்ருதி ரொம்பவே நம்பியிருக்கிறார். தொடர்‌ தோல்விகளைக் கண்டு ஸ்ருதியும், அவரை வைத்து படம் எடுத்து வரும் டைரக்டர் முருகதாசும் கொஞ்சம் கலக்கம் அடைந்திருக்கிறார்களாம்.

அதேநேரம் முருகதாஸ் படம் ரீலிஸ் ஆன பிறகு அந்த ரிசல்ட்டை தெரிந்து கொண்ட பிறகுதான் அடுத்த படத்தில் கமிட் ஆவது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஸ்ருதி. எல்லாம் முருகதாஸ் மீதிருக்கும் நம்பிக்கையில்தானாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum