தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலாவின் அவன் இவன் சூட்டிங் ஓவர்!

Go down

 பாலாவின் அவன் இவன் சூட்டிங் ஓவர்! Empty பாலாவின் அவன் இவன் சூட்டிங் ஓவர்!

Post  ishwarya Sat Apr 20, 2013 1:29 pm

நான் கடவுள் படத்துக்கு பிறகு டைரக்டர் பாலா இயக்கி வந்த அவன் இவன் படத்தின் சூட்டிங் முடிந்து விட்டது. சூட்டிங்கை இழு இழுவென இழுப்பதில் பாலாவுக்கு நிகர் பாலாதான் என்று சொல்லும் அளவுக்கு இழுத்தடிப்பார் பாலா.

அண்டை மாநில இயக்குனர்களையும் அசர வைக்கும் அளவுக்கு படம் எடுத்து வரும் பாலாவின் அவன் இவன் படத்தில் விஷால், ஆர்யா ஆகிய 2 பேருமே வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நந்தா படத்துக்குப் பிறகு யுவனுடன் கைகோர்க்கிறார் பாலா. இந்தப் படத்தின் நாயகியாக ஜனனி அய்யர் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார். நான் கடவுள் படத்தில் ஜெயமோகனுடன் கைகோர்த்த பாலா, இந்தப் படத்தில் இன்னொரு பிரபல எழுத்தாளருடன் இணைந்துள்ளார். அவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவர் ஏற்கெனவே பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

வழக்கமான பாலா படமாக இந்த படம் இருக்காது என்று படத்தின் துவக்க நாளில் பாலா கூறினார். ஆனால் படத்தில் ஸ்டில்களைப் பார்த்தால் வழக்கான ஸ்டில்களாகவே தெரிகிறது. இளம் தலைமுறைக்கு புதிய செய்தி ஒன்றை இப்படத்தில் கூறியிருப்பதாக கூறியிருக்கும் பாலா, ஒருவழியாக 250 நாள் சூட்டிங்கிற்கு பிறகு பூசணிக்காய் உடைத்திருக்கிறார்.

சூட்டிங் நிறைவு நாளில் பூசணிக்காய் உடைப்பது பாலா உள்ளிட்ட சிலபல படக்குழுவினரின் சம்பிரதாயம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘அவன் இவன்’… பாலாவின் புதிய படம்!
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க
» அசல் சூட்டிங் ஓவர்! பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் அஜித்!!
» நண்பன் படத்தின் 2ம் கட்ட சூட்டிங் ஓவர்
» ஜூன் 17-ல் ‘அவன் இவன்’!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum