தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விழாக்களில் ஆபாச உடை: நடிகை சோனாவுக்கு எதிராக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Go down

விழாக்களில் ஆபாச உடை: நடிகை சோனாவுக்கு எதிராக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Empty விழாக்களில் ஆபாச உடை: நடிகை சோனாவுக்கு எதிராக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Post  ishwarya Sat Apr 20, 2013 1:05 pm

பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் படங்களும் தயாரித்து வருகிறார். சோனாவின் சமீபத்திய பேட்டிகள் கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளதாக இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடிகை சோனாவின் நடவடிக்கைகள் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமாக உள்ளன. பொதுநிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சி உடையில் வருகிறார். முற்போக்குத்தனம் என நினைத்து கலாச்சாரத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகிறார்.

ஆணோடு வாழ முடியாது. ஆண் இல்லாமலும் வாழ முடியாது என்று பேசுகிறார். ஆண்களை நம்ப மாட்டேன். நண்பர்களை நம்புவேன் என்கிறார். பெண்களை சிகரெட் பிடிக்க தூண்டுகிறார். பார்ட்டிகளும் நடத்துகிறார். மேற்கத்திய கலாச்சாரத்தை திணிப்பதையே அவர் செயல்பாடுகள் காட்டுகின்றன.

எனவே சோனாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும். உடுமலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ரமணன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காதலர் தினம் கொண்டாடப்படுவதை எதிர்த்து வருகிற 13-ந்தேதி கடற்கரை கண்ணகி சிலை அருகில் மாநில செயலாளர் குமார் தலைமையில் நாளை மறுநாள் (13-ந்தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

காதலர் தினம் என்பது நமது பண்பாட்டுக்கு விரோதமானது. அதை தடை செய்ய வேண்டும். அன்றைய தினம் சில நட்சத்திர ஓட்டல்களில் பெண்களுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் இதை அனுமதிக்கக்கூடாது. விதி முறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபாச போஸ் கொடுப்பதா?: நடிகை ஸ்ரேயாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்
» திவ்யாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி!
» ஆர்யா படத்துக்கு செருப்பு மாலை… இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
» நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
» பெண்களை புகைபிடிக்க தூண்டுவதா? நடிகை சனாகானுக்கு “சிகரெட்” அனுப்பும் போராட்டம் – இந்து மக்கள் கட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum