தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல் ஜோடியான இளம் பாலிவுட் நடிகை!

Go down

கமல் ஜோடியான இளம் பாலிவுட் நடிகை! Empty கமல் ஜோடியான இளம் பாலிவுட் நடிகை!

Post  ishwarya Sat Apr 20, 2013 12:14 pm

நடிகர் கமல்ஹாசன் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். இவர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனை விட ஒரு வயது இளையவர்.

செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தில் கமலுக்கு ஜோடி யார்? என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. முதலில் அனுஷ்கா என தகவல் வெளியானது. பின்னர் அவர் இல்லை என்று கூறப்பட்டது. இப்போது இளம் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாதான் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சோனாக்ஷி சின்ஹா, சல்மான்கானுடன் தபாங் என்ற படத்தில் நடித்ததன் மூலம் வெற்றி நாயகியாக பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் மும்பை சென்ற செல்வராகவன், சோனாக்ஷிக்கு கதை சொல்லியிருக்கிறார். அவருக்கு ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்துவிட்டதால் கமலுடன் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

தற்போது அக்ஷய் குமாருடன் ஜோக்கர் படத்தில் நடித்து வரும் சோனாக்ஷி, அந்த படத்தை முடித்த கையோடு சென்னைக்கு வருகிறார். இன்னமும் பெயரிடப்படாத இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் எடுக்கப்படுகிறது.

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதியை விட வயதில் ஒரு வருடம் இளையவர் என்பது கூடுதல் தகவல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum