தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நோய்களை விரட்டும் சனீஸ்வர வழிபாடு

Go down

நோய்களை விரட்டும் சனீஸ்வர வழிபாடு Empty நோய்களை விரட்டும் சனீஸ்வர வழிபாடு

Post  gandhimathi Mon Jan 21, 2013 1:50 pm


நோய்களை விரட்டும் சனீஸ்வர வழிபாடு


பலவிதக் கொடுமைகளுக்கும் காரண பூதனாக உள்ளவர் சனி என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் ஆதிக்கம் கொண்டவர்கள் பட்டறிவு மூலம் வாழ்க்கையில் சிறந்த உயர்ந்த அனுபவங்களை பெற்று உன்னதமாக பிறருக்கு யோசனை சொல்லும் அனுபவசாலிகள் ஆவார்கள். சர்வ சக்திகளை பெற்று சாதனை புரியச் செய்வார்.

ஒரு நியாயமான கிரகம். மனிதர்களின் பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களைத் தருவதில் இவருக்கு நிகர் இவரே. உலகுக் கெல்லாம் ஒளியை அள்ளி வீசும் சூரிய தேவனுக்கும் சுவர்ச்சலாவுக்கும் யமன், வைவஸ்தமனு, யமுனா என்ற மூன்று குழந்தைகள் உள்ளன. சுவர்ச்சலாவுக்கு சூரியனின் அன்பான அணைப்பு அதீதமான உஸ்ணமாகத் தகித்தது.

சுவர்ச்சலாவால் தாங்க முடியவில்லை தன் நிழலைக் கொண்டு ஒரு உருவத்தைப் படைத்தாள். அவளுக்குப் பெயர் சாயாதேவி. தான் தவம் முடிந்து வரும் வரை தன் கணவனுக்கு தன்னிடத்தில் மனைவியாக இருந்து பணிவிடைசெய்யும்படி பணிந்து விட்டுப் போய் விடுகிறாள். சாயாதேவியும் அப்படியே வாழ்ந்து வருகிறாள்.

சாயாதேவிக்கு தப்தி (பத்திரை) சாவர்ணிக மனு சிருதகர்மா (சனி) என்று மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். சாயாதேவி தனக்கென்று குழந்தைகள் பிறந்த பின்பு மாற்றாந் தாயைப் போல் நடந்து கொண்டாள். சூரியனும் யமனும் அவளை மன்னித்து விட்டார்கள். சூரிய தேவன் சுவர்ச்சலா தேவியைத் தேடிக் கண்டுபிடித்து தீராத காதலுடன் தழுவினான்.

சூரியனின் காந்த சக்தியால் சுவர்ச்சலா தேவிக்கு அப்பொழுது பிறந்தவர்கள் தான் அசுவினி தேவர்கள். இந்நிலையில் சாயாதேவி தன் குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தாள். அதிலும் சிருதகர்மாவைத் (சனி) தவிர மற்றவர்கள் பேரும் புகழும் பெற்றிருந்தார்கள். மேலும் சிருதகர்மாகவின் கண்கள் அதீதவீர்யமுள்ளவை.

எவர் மீது அவன் பார்வை பட்டாலும் உடனே ஆபத்து விளையும். அதனால் சாயாதேவி அவனை வெளியே விடாமல் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் விண்ணுலகமே கயிலையை நோக்கிச் சென்றது. கயிலையில் விநாயகப் பெருமானுக்குப் பிறந்த நாள். எல்லோரும் கயிலையில் நடக்கும் விழாவைக் காணச் செல்வதால் தானும் அங்கு செல்ல வேண்டும் என்று சிருதகர்மா அடம் பிடித்தான்.

சாயாதேவி எத்தனையோ சொல்லியும் சிருதகர்மா கேட்கவில்லை. இறுதியில் பிடிவாதம் வென்றது. கயிலை மலையின் ஓர் ஓரத்தில் நின்று விழாவைக் கண்டுகளித்து விட்டு வருமாறு அன்னை ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தாள். கயிலையில் சிருதகர்மா காலடிவைத்ததுமே கயிலை மலை ஒரு குலுங்கு குலுங்கியது.

இதை மலைமகள் பார்வதியும் உணர்ந்தாள். சக்தி சூரியனின் குமாரன் சிருதகர்மா இதோ வந்து கொண்டிருக்கிறான். அவன் பார்வைபடா வண்ணம் குழந்தை விநாயகனைப் பார்த்து கொள் என்று சிவபெருமான் கூற, அன்னை மகன் விநாயகனை வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். சக்திக்கு மீறிய கவசம் எது? ஆனால் சிருதகர்மா விநாயகனைப் பார்த்துவிட அவனின் பார்வைத் தீட்சண்யத்தால் விநாயகனின் தலைதெறித்து விழுந்தது.

பார்வதி கதறினாள். சிவபெருமாள் மனைவியைச் சமாதானப்படுத்தினார். கஜமுகாசுரனை சம்ஹாரம் பண்ணப் பிறந்தவன் நம் குமாரன் விநாயகன். அதற்கு சாதாரண முகம் உதவாது. யனையின் முகம் தான் வேண்டும் என்று சமாதானம் சொன்னார். பைரவனை அனுப்பி வடக்கு திக்கில் தலைவைத்துப் படுத்திருக்கும் யானையின் தலையைக் கொண்டு வரச் சொன்னார்.

காசி அருகே படுத்துக்கிடந்த யானை ஒன்றின் தலையை பைரவன் கொண்டு வந்து கொடுத்தார். அது முதல் விநாயகர் கஜமுகன் ஆனார். புதல்வனின் தலையைப் பார்க்க பார்க்க பார்வதி தேவியாருக்கு பற்றிக் கொண்டு வந்தது. கோபம் கோபமாக வந்தது. கயிலையில் காலெடுத்து வைத்த உன்பாதம் ஊனமாகட்டும் என்று சபித்தாள்.

அன்று முதல் விந்தி நடந்ததால் சனி. ஆனால் விந்தி விந்தி வீடு திரும்பிய சிருதகர்மாவைக் கண்டு சாயாதேவி வெகுண்டாள். பார்வதியின் மகனான விநாயகனின் வயிறு ஓநாய் வயிறாகட்டும் என்று சபித்தாள். விநாயகரின் வயிறு பெருத்தது. அன்று முதல் விநாயகன் லம்போதரன் ஆனார். சனி என்ற சிருதகர்மா தவம் ஒன்றே சரியான வழி என்று சாயாதேவி மகனுக்கு ஆலோசனை வழங்கினாள்.

தாயின் அனுமதியுடன் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்து கடுமையான தவம் இருந்தார். சனியின் தவத்தை மெச்சி பரமன் காட்சி கொடுத்தார். சிருதகர்மா உன் தவத்தால் என்னை மிகவும் மகிழ்வித்தாய் இன்று முதல் தேவர்களிலேயே ஈஸ்வரப் பட்டம் உனக்கு மட்டும் தான்.

மகேஸ்வரனுக்குப் பிறகு ஈஸ்வரப்பட்டம் சனீஸ்வரனான உனக்குத் தான் நவக்கிரகங்களில் ஸ்திர நிலையும் உனக்குத் தான். நீ பூஜித்த லிங்கம் சனீஸ்வரலிங்கம் என்று அழைக்கப்படும். உனக்கேற்ற நாளான சனிக்கிழமையும் ஸ்திரவாரம் என்று அழைக்கப்படும். சிருதகர்மா அன்று முதல் சனீஸ்வரனாகவும் சனி பகவானாகவும் இருந்து நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறார் என்கிறார் விஜய் சுவாமிஜி.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum