தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘தண்ணிய போட்டு உளறிட்டு வேட்பாளரை அடிக்கிற’ – விஜயகாந்த் மீது வடிவேலு தாக்கு

Go down

‘தண்ணிய போட்டு உளறிட்டு வேட்பாளரை அடிக்கிற’ – விஜயகாந்த் மீது வடிவேலு தாக்கு Empty ‘தண்ணிய போட்டு உளறிட்டு வேட்பாளரை அடிக்கிற’ – விஜயகாந்த் மீது வடிவேலு தாக்கு

Post  ishwarya Fri Apr 19, 2013 2:51 pm

சொந்த கட்சி வேட்பாளரையே தாக்கும் விஜயகாந்த் ஒரு தலைவரா என்று நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பினார்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதை அந்த வேட்பாளர் திருத்தியதால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்து உதைத்தார்.

இந்நிலையில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய வடிவேலு,

தர்புரியில விஜயகாந்த் கட்சி வேட்பாளர் பேரு பாஸ்கர். பாஸ்கர் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக, வேட்பாளர் பாண்டியன் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். எத்தனாவது ‘ரவுண்டில்’ அவர் இருந்தார் என்று தெரியவில்லை.

உடனே கூட இருந்த அந்த வேட்பாளர், அண்ணே, என் பேரு பாண்டியன் இல்லைன்ணே, பாஸ்கர் என்று கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான அந்த டம்மி பீஸூ (விஜய்காந்த்) ஆயிரக்கணக்கான ஜனங்க கூடியிருக்க, அவுங்க முன்னாடியே அந்த வேட்பாளரை அடிச்சு உதைக்குது. நீ தண்ணிய போட்டு உளறியிருக்க. வேட்பாளர் தன்னுடைய பெயரை எடுத்துச் சொல்றாரு. அதுக்கு கோபம் வந்திருச்சு, போட்டு அடிக்கிற.

அடிச்ச அடியில அந்த வேட்பாளரின் ரெண்டு பல்லு விழுந்திருச்சி. வெளியே துப்புனா அசிங்கம்னு அதை அப்படியே வேட்பாளர் முழுங்கிட்டாரு.

ஓபனிங் எல்லாம் இவனுக்கிட்ட நல்லதான் இருக்கு. பினிசிங் சரியில்லையே. கருப்பு எம்ஜிஆருக்கு எப்படின்னா பில்டிங் ஸ்டார்ங்கு. ஆனால் பேஸ் மட்டம் வீக்.

தவறை சுட்டிக்காட்டிதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவன் எல்லாம் தலைவனா, இவர் பெரிய பெரிய பொறுப்புகளுக்கு ஆசைப்படலாமா என்றார்.

கக்கூஸ் போற அவசரமா?:

முன்னதாக சென்னை தாம்பரத்தில் பிரச்சாரம் செய்த வடிவேலு, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு லூசு வந்திருக்கு. அது என்ன சொல்லுது. நாடு சரியில்ல… ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு, நான் நாட்டு மக்களுக்கு விடுதலை வாங்கித் தரப்போறேன்னு சொல்லுது.

என்ன இப்ப வெள்ளைக்காரன் பிரிட்டிஷ் ஆட்சியா நடந்துக்கிட்டிருக்கு. நீ விடுதலை வாங்கித் தர்றதுக்கு. அந்த லூஸூ முதல்ல என்ன சொல்லுச்சு. நான் மக்களோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. தெயவத்தோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு.

இப்ப நீ எங்க போய் கூட்டணி சேர்ந்திருக்க. சீட்டுக்காக போய் சேர்ந்திருக்க. அது சீட்டுக்காக சேர்ந்த அணி அல்ல. சீட்டிங் அணி. காசு வாங்கிட்டு போய் சேர்ந்திருக்க நீ, பிளடி ஃபூல்.

யார ஏமாத்துற நீ, மொதல்ல என்ன சொன்ன நீ. 30,40க்கு போறதெல்லாம் எலும்பு பொறுக்குற நாய். அது நான் இல்லன்னு சொன்னீல்ல. இப்ப 41 எலும்பு துண்டு வாங்கியிருக்க. அதுக்கு பேரு என்ன?, நீதான சொன்ன. 30,40 வாங்குறதுக்கு நான் நாயில்லன்னு.

கூட்டணி ஏன் சேர்ந்தீங்கன்னு பத்திரிக்கைகாரங்க கேட்குறாங்க. அதுக்கு நீ என்ன சொல்லுற. இப்ப கூட்டணி சேரனுங்குறது அவசரம்னு சொல்லுற. என்ன கக்கூஸ் போற அவசரமா?.

அதிமுகவை கைப்பற்ற விஜயகாந்த் திட்டம்:

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் கருணாநிதியின் நல்லாட்சி தொடர திமுகவிற்கு வாக்குகேட்டு உங்களிடம் வந்திருக்கிறேன்.

ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளவர் நம் முதல்வர் கருணாநிதி. ஏழை மக்களுக்கு இலவசம் கொடுத்தால் ஒருவர் திட்டுகிறார், தடுக்க நினைக்கிறார். ஏனென்றால் அவருக்கு ஏழைகள் மீது அக்கறையே கிடையாது.

சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் அரசியலுக்கு வந்துள்ளார். நான் இன்னும் சினிமாவில் ஓடும் குதிரை. கருணாநிதி ஆட்சியில் ஏழைகள் நன்மை அடைவதால் அவருடைய ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக ஏழை மக்களை சந்தித்து ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பவர், அந்தம்மாவை முதல்வர் ஆக்குங்கள் என்று இதுவரை எங்காவது பேசியிருக்கிறாரா? முதல்வராகும் ஆசையுள்ள அவர் அதிமுகவை கைப்பற்றுவார் என்று தகவல் கிடைத்துள்ளது. ஏழைகளைப் பற்றி நினைக்காதவரை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்து அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. கருணாநிதி சொன்னால் நிச்சயம் வரும். ஆனால் அவர்கள் சொன்னால் வரும் ஆனால் வராது. இது மக்களுக்கே நன்றாகத் தெரியும். கருணாநிதியை திட்டுபவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜயகாந்த் குறித்து அவதூறாகப் பேசிய வடிவேலு மீது தேர்தல் ஆணையம் வழக்கு
» வடிவேலு ஒரு சாக்கடை! டைரக்டர் அமீர் கடும் தாக்கு!!
» கரடி கையில் சிக்கிய நிலையில் வடிவேலு – சிங்கமுத்து தாக்கு
» ‘நோட்டீஸ் எப்படி அனுப்பலாம்?’ : நடிகர் சங்கம் மீது விஷால் மீண்டும் தாக்கு
» விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum