தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெய்வத்திருமகன் என் திரையுலக வாழ்வில் திருப்புமுனை படம் -விக்ரம்

Go down

தெய்வத்திருமகன் என் திரையுலக வாழ்வில் திருப்புமுனை படம் -விக்ரம் Empty தெய்வத்திருமகன் என் திரையுலக வாழ்வில் திருப்புமுனை படம் -விக்ரம்

Post  ishwarya Fri Apr 19, 2013 2:31 pm

விக்ரம்-அனுஷ்கா நடித்த தெய்வத்திருமகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.விஜய் இயக்கியுள்ளார். இவர் மதராசப்பட்டணம் படத்தை டைரக்டு செய்தவர். இதில் விக்ரம் மனவளர்ச்சி குன்றியவராக நடித்திருக்கிறார்.

படத்தின் டிரெய்லர் வெளியிடும் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்று பேசியதாவது:-

தெய்வத்திருமகன் என் திரையுலக வாழ்கையில் திருப்பு முனைப்படம். படப்பிடிப்பு ஹாலிடே மாதிரி கழிந்தது. நீரப்பா ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் இசை, படத்துக்கு பெரிய பலம். அருமையான பாடல்களை ஜி.வி.பிரகாஷ் பண்ணிஇருக்கிறார். என்னுடன் நடித்த எல்லோருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

உணர்வுப்பூர்வமான சீன்கள், சென்டிமென்ட் காட்சிகள் நிறைய இருக்கு. கிளைமாக்ஸ் அற்புதமாக வந்துள்ளது. அனுஷ்கா கிளாமர் குயினாக இருக்கிறார். அவரை இந்த படத்தில் வித்தியாசமாக பார்க்கலாம். தயாரிப்பாளர் மோகன் நடராஜன் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்.

விஜய் அற்புதமான இயக்குனர். குழந்தை தனமாக பழகுவார். படத்திலும் அவர் குணத்தைகொண்டுவந்து இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் மோகன் நடராஜன், இசைஅமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் நாசர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum