தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரவான் சூட்டிங்கில் ஸ்டன்ட் கலைஞர் திடீரென மரணம்

Go down

அரவான் சூட்டிங்கில் ஸ்டன்ட் கலைஞர் திடீரென மரணம் Empty அரவான் சூட்டிங்கில் ஸ்டன்ட் கலைஞர் திடீரென மரணம்

Post  ishwarya Fri Apr 19, 2013 2:18 pm

வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகி வரும் “அரவான்” பட சூட்டிங்கின் போது ஸ்டன்ட் கலைஞர் ஒருவர் திடீரென மரணம் அடைந்தார்.

ஆல்பம், வெயில், அங்காடித்தெரு போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் வசந்தபாலன் அடுத்து அரவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆதி, “பேராண்மை” ஹன்சிகா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் கபீர் பேடியும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். 18ம் நூற்றாண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் சூட்டிங் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மதுரையில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது சூட்டிங்கில் திடீரென ஒரு ஸ்டன்ட் கலைஞர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்து இறந்த அந்த ஸ்டன்ட் கலைஞர் உடலை பிரதே பரிசோ‌தனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் இயற்கையாக தான் மரணம் அடைந்திருக்கிறார் என்று கூறியிருக்கின்றனர். இதனையடுத்து இறந்த ஸ்டன்ட் கலைஞரின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்டன்ட் கலைஞரின் திடீர் மரணத்தால் அரவான் படத்தின் சூட்டிங் ஒருநாள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் வழக்கம் போல் படசூட்டிங் நடைபெற தொடங்கியது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum