தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித் நற்பணி இயக்கம் கலைக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்!!

Go down

அஜித் நற்பணி இயக்கம் கலைக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்!! Empty அஜித் நற்பணி இயக்கம் கலைக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்!!

Post  ishwarya Fri Apr 19, 2013 11:57 am

நடிகர் அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ள அஜித், நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்று கூறியுள்ளார். 40வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும் இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் – சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை – பார்க்கவும் மாட்‌டேன். கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்பதே என் கருத்து.

வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.

இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

அஜித்குமாரின் இந்த அதிரடியான முடிவு அவரது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனினும் அஜித் சொல்லியிருக்கும் கருத்துக்கள் ஏற்கக்கூடியவை என்பதால் பெரும்பாலானவர்கள் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்கள். முன்பொருமுறை தலைமைக்கு கட்டுப்படாமல் ஒரு ரசிகர் மன்றம் இயங்கியதால், ரசிகர் மன்றத்தையே கலைப்‌பேன் என்று அஜித் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம். அவரது எச்சரிக்கையையும் மீறி சில மன்றங்கள் தேர்தல் நேரத்தில் செயல்பட்டதால்தான் இப்படியொரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். அஜித்தின் இந்த முடிவு சரியானதுதானா? அல்லது இன்னும் கொஞ்சம் யோசித்து முடி‌‌வெடுத்திருக்க வேண்டுமா? என்பதை இங்கே கருத்தாக பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே…!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அஜித் தொடங்கும் அரசியல் தொடர்பில்லாத இயக்கம்!
»  தமன்னாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்! பரபரப்பு தகவல்கள்!!
» ரஜினி ரா ஒன் படத்தில் ந‌டிக்கவில்லை ? புதிய பரபரப்பு தகவல்கள்
» அஜித்திற்கு போட்டி விஜய்தான் – ஷாலினி அஜித் பரபரப்பு.!
» கர்ப்பப்பையை அகற்றிவிட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் தமிழ் பெண்கள்! – பரபரப்பு தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum