தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தற்கொலை வழக்கு: நடிகை நிலா பரபரப்பு வாக்குமூலம்.!

Go down

 தற்கொலை வழக்கு: நடிகை நிலா பரபரப்பு வாக்குமூலம்.! Empty தற்கொலை வழக்கு: நடிகை நிலா பரபரப்பு வாக்குமூலம்.!

Post  ishwarya Wed Apr 17, 2013 12:08 pm



குர்கான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ருச்சி தற்கொலை வழக்கு விசாரணையில் நடிகை நிலா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழில் ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிலா. அதன்பின் சில படங்களின் நடித்துள்ளார். இந்நிலையில் குர்கான் பகுதியைச் சேர்ந்த ருச்சி (28) என்பவரது தற்கொலை வழக்கில் நிலாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

ருச்சியின் தற்கொலைக்குக் காரணம் நிலாவிற்கும், ருச்சியின் கணவர் சுமித்திற்கும் உள்ள தகாத உறவுதான் என்று கூறப்படுகிறது. இத்தகவல் ருச்சியின் டைரி மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து நிலா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தனது தந்தையுடன் டெல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முந்தினம் வந்தார். அப்போது நிலா வாக்குமூலம் அளித்தார். அதில், “சுமித்தை எனக்கு 8 ஆண்டுகளாகத் தெரியும், 2004 எனக்கும் சுமித்துக்கும் திருமணம் செய்ய முடிவானது. சில காரணங்களால் அது நடக்கவில்லை.

அதற்கு பிறகு அவருடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. அவரிடம் பேசி பல ஆண்டுகள் ஆகிறது. அந்த பெண் தற்கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் நிலா கூறியதாவது: “என் மீது பொய்யான குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்கால் என் நடிப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. வழக்கு பதிவானதால் வெளிநாடு செல்ல முடியவில்லை. அந்த வாய்ப்பு பறிபோய்விட்டது” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை வைஷ்ணவி தற்கொலை வழக்கு – டிவி நடிகர் தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறை
» எனது மார்புகளை அழுத்திப்பிடித்து படுக்கைக்கு அழைத்தார் சரன் : சோனா பரபரப்பு வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)
» நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை : நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்
» இந்தி நடிகை சரா கானின் ஆபாச படம் வெளியானததால் பரபரப்பு!
» காதல் தோல்வி… நடிகை தற்கொலை முயற்சி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum