தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் தமிழுக்கு வருகிறார் ‘பிரியாமணி’

Go down

மீண்டும் தமிழுக்கு வருகிறார் ‘பிரியாமணி’ Empty மீண்டும் தமிழுக்கு வருகிறார் ‘பிரியாமணி’

Post  ishwarya Wed Apr 17, 2013 12:02 pm

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்ததால் தமிழிகம் முழுவதும் அறியப்பட்ட நடிகை பிரியா மணி. இப்படத்திற்குப் பிறகு சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வந்த பிரியாமணி தமிழில் நடிக்காமலேயே இருந்தார். கடைசியாக இவர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ‘ரத்த சரித்திரம்’ படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் ஏன் நடிக்க மறுக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, மீண்டும் நல்ல கதை கிடைத்தால் மட்டுமே நடிப்பேன்…’ என்று சொல்லி வந்தவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க வருகிறார்.

பிரபல இயக்குனரான வசந்த்தின் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘ நடை – உடை – பாவனை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தில், கிளாமர் இல்லாத உணர்வுப் பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்கிறார். மேலும், ‘பருத்திவீரன்’ மாதிரி இப்படம் எனக்கு ஒரு நல்ல பெயரை வாங்கித் தரும் என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum