தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்னா ஹஸாரே போராட்டம் எந்த பலனையும் தராது! – நமீதா பேட்டி

Go down

அன்னா ஹஸாரே போராட்டம் எந்த பலனையும் தராது! – நமீதா பேட்டி Empty அன்னா ஹஸாரே போராட்டம் எந்த பலனையும் தராது! – நமீதா பேட்டி

Post  ishwarya Wed Apr 17, 2013 11:45 am

ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே மேற்கொண்டுள்ள போராட்டத்தால் எந்தப் பலனும் வந்துவிடாது. மாற்றம் மக்களிடமிருந்து வர வேண்டும், என்றார் நடிகை நமீதா.

ஹஸாரேவின் போராட்டம் குறித்து நமீ்தாவிடம் கருத்து கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், “அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள்.

ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும்.

ஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும்.

கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும்.

நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது.

இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும்,” என்றார்.

ஹஸாரேவின் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, “இருக்கலாம். அரசியல் நோக்கம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இந்தியா பரந்த நாடு. என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது,” என்றார் நமீதா.

இந்தப் போராட்டம் தெற்கு மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறித்து?

“அது உண்மைதான். காரணம் இங்கே அதைவிட முக்கிய பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் கருதலாம். ஹஸாரே குறைந்தபட்சம் இந்த மாநில மக்களிடம் பிரச்சாரம் கூட செய்யவில்லையே. இதை அவருக்கும் அரசுக்குமான பிரச்சினையாகத்தான் ஹஸாரே பார்க்கிறார். இதில் மக்களுக்கு என்ன வேலை இருக்கிறது?” என்றார் நமீதா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது : அஜித் அதிரடி பேட்டி!
» ‘பன்னாட்டு நிறுவனங்களுக்காக எடுக்கப்பட்ட பிரமாண்ட சினிமா’! – ஹஸாரே போராட்டம் பற்றி எஸ்பி ஜனநாதன்
» அன்னா ஹசாரே போராட்டம்: அமிதாப்-ஷாருக்கான், பிபாசா பாசு ஆதரவு
» திருமணத்திற்கு பிறகும் எந்த பாத்திரத்திலும் நடிக்க முடியும்: ஐஸ்வர்யாராய் பேட்டி
»  நம்பர் ஒன் நடிகை என்பதில் எந்த பெருமையும் இல்லை : சமந்தா பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum