தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தொடங்கியது ‘ விஸ்வரூபம் ‘

Go down

தொடங்கியது ‘ விஸ்வரூபம் ‘ Empty தொடங்கியது ‘ விஸ்வரூபம் ‘

Post  ishwarya Tue Apr 16, 2013 6:13 pm

கமல் நடித்து இயக்க இருக்கும் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் நாயகி யார், எப்போதில் இருந்து படப்பிடிப்பு என்று பல்வேறு கேள்விகள் வலம் வந்த வண்ணம் உள்ளன.

ராகுல் போஸ் என்ற இந்தி நடிகரை ‘விஸ்வரூபம்’ படத்தின் வில்லன் பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்து இருக்கிறாராம் கமல். ராகுல் போஸ் இந்தியில் மசாலா படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவிட்டு, நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க கூடியவர்.

அபர்ணா சென் இயக்கத்தில் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர்’ என்ற படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து, பலரது பாராட்டைப் பெற்றவர் ராகுல் போஸ்.

கமலிடம் முழு கதையையும் கேட்டவர், அவரின் இயக்கத்தில் நடிக்க உடனே ஒ.கே சொல்லி விட்டாராம். ‘விஸ்வரூபம்’ படத்தில் கொடூரமான வில்லன் பாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படம் கண்டிப்பாக தனது வாழ்வில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறாராம்.

ஜேப்பியார் கல்லூரியில் செட் அமைக்கப்பட்டு, இன்று (ஆகஸ்ட் 22 ) முதல் ‘விஸ்வரூபம்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நாயகியாக அனுஷ்காவை அணுகி இருக்கிறார்கள். அவரோ தனது கால்ஷீட் தேதிகள் இல்லாத போதிலும் எப்படியாவது தேதிகள் ஒதுக்கி தருவதாக கூறி இருப்பதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் விவகாரம்: பேச்சுவார்த்தை தொடங்கியது
» இசை - வியாபாரம் தொடங்கியது
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» தொடங்கியது சூர்யாவின் சிங்கம் 2!
»  தனுஷின் நய்யாண்டி தொடங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum