தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Go down

 கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Empty கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post  ishwarya Tue Apr 16, 2013 4:46 pm

யதார்த்தமான பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் சீமான், முதல் முறையாக நகைச்சுவை கலந்த திகில் படத்தில் நடிக்க இருக்கிறார். அதுவும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அப்புதிய படத்திற்கு ‘கண்டுபிடி கண்டுபிடி’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராம் சுபாராமன் இப்படத்தின் முலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது:- “முழுக்க முழுக்க கிராமத்தில் நடக்கும் நகைச்சுவை கலந்த திகில் படம் இது. கதை இப்படித்தான் நகரும் என்று ஆரம்பம் முதல் இறுதி வரை யாராலும் யூகிக்க முடியாத வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ‘சி.பி.ஐ. டைரி குறிப்பு’ படத்தில் மம்முட்டி ஏற்ற கதாபாத்திரத்துக்கு நிகராக சீமானின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில், கதாபாத்திரங்களுக்கு தேவையான முகங்களை கண்டுபிடித்து, சுமார் 50 பேர்களை அறிமுகப்படுத்துகிறோம்” என்றார். இப்படத்தின் சீமானுக்கு ஜோடியாக கேரள அழகி ஐஸ்வர்யா தேவன் நடிக்கிறார். டி.வி. புகழ் முரளி, தருண் சத்ரியா, ஜெகன்னாத், செவ்வாளை ஆகியோரும் நடிக்கிறார்கள். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சினேகன் எழுதிய பாடல்களுக்கு கல்கி இசையமைக்கிறார்.

முழங்கிறதெல்லாம் தமிழ்.. தமிழன்…..னு, டூயட் மட்டும் கேரள அழகி கூடவா…?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum