தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுஷ்காவும் இல்லை; தமன்னாவும் இல்லை : ராகவா லாரன்ஸ்!!

Go down

அனுஷ்காவும் இல்லை; தமன்னாவும் இல்லை : ராகவா லாரன்ஸ்!! Empty அனுஷ்காவும் இல்லை; தமன்னாவும் இல்லை : ராகவா லாரன்ஸ்!!

Post  ishwarya Tue Apr 16, 2013 2:23 pm

தெலுங்கில் ரபெல் என்ற படத்தின் நாயகியாக அனுஷ்காவும் நடிக்கவில்லை; தமன்னாவும் நடிக்கவில்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். காஞ்சனா படத்துக்கு பிறகு இயக்குனராகவும், ஹீரோவாகவும் ராகவா லாரன்ஸின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தியிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் தெலுங்கில் அவர் ரபெல் என்ற பெயரில் புதிய படத்தினை இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் நாயகியாக முதலில் நடிகை அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில தினங்களில் அனுஷ்காவுக்கு பதிலாக தமன்னா நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாயின. ஏற்கனவே காஞ்சனா படத்திலும் லட்சுமி ராய் நடித்த கேரக்டரில் முதலில் அனுஷ்காதான் நடிப்பதாக இருந்தது. பின்னர் சிலபல காரணங்களால் லட்சுமிராய் நடித்தார். இந்நிலையில் அடுத்த படத்திலும் அனுஷ்காவின் பெயர் அடிபட்டு, பின்னர் மாற்றப்பட்டிருப்பதால் அனுஷ்கா-லாரன்ஸ் இடையே ஏதோ மோதல் என்று ஆந்திர ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இதற்கு லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அனுஷ்காவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சண்டை போடவும் இல்லை. ரபெல் படத்தில் அனுஷ்கா நடிக்க முடியாமல் போனது எதிர்பாராமல் நடந்தது. அதேபோல இந்தப் படத்தில் தமன்னா நடிப்பதாக வந்த செய்தியிலும் உண்மையில்லை. இன்னும் நான் யாரையும் நாயகியாக முடிவு செய்யவில்லை, என்று கூறியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இசையமைப்பாளராகும் ராகவா லாரன்ஸ்
» ராகவா லாரன்ஸ் நடிக்கும் பரமன்
» ‘உயிரெழுத்து’ படவிளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம்: ராகவா லாரன்ஸ்
»  ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.
» ரஜினி பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரிக்கும் ராகவா லாரன்ஸ் – விஜய் ஆன்டனி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum