தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை…ஆக்ஷன் ஹீரோவின் அங்கலாய்ப்பு

Go down

யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை…ஆக்ஷன் ஹீரோவின் அங்கலாய்ப்பு Empty யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை…ஆக்ஷன் ஹீரோவின் அங்கலாய்ப்பு

Post  ishwarya Fri Apr 12, 2013 2:34 pm

ஆக்ஷன் பட ஹீரோக்கள் பலருக்கு முணுக்கென்றால் கூட கோபம் வரும். படத்தில் வருவது போலவே முஷ்டியை உயர்த்தவும் அஞ்சமாட்டார்கள். (இப்போது அந்த காரியத்தை காமெடியன்கள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அது வேறு கதை) அப்படி ஒரு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்து இருந்தும் விஷால் சொல்லும் பதிலை கேட்டால், கெக்கேபிக்கே என்று சிரிப்பு வரும். காரணம் இதுவரைக்கும் யாரையும் கை நீட்டி அடித்ததில்லையாம் அவர்.

சண்டக்கோழி, திமிரு போன்ற ஆரம்பகால படங்களில் எல்லாம் சொந்த ஊரிலிருந்து வெளியூருக்கு செல்வார் விஷால். போகிற இடத்தில் ஒரு வம்பு வரும். ஒரு பெரிய மனுஷனை இழுத்து போட்டு அடிப்பார். அப்புறம் என்னாச்சு என்று சொல்லி முடிப்பார்கள் க்ளைமாக்சில். இதையெல்லாம் பார்ப்பவர்கள் அவரை முன்கோபி என்று முடிவெடுத்திருந்தால் அந்த எண்ணத்தை எதையாவது வைத்து அழித்துவிடுவது நன்று.

படத்துலதான் சார் நான் அடிச்சு நொறுக்கறது எல்லாம். நிஜத்தில் நான் இதுவரைக்கும் யாரையும் அடிச்சதில்ல. ஸ்கூலில் படிக்கும் போது கூட பசங்களோட கட்டி உருண்டதில்லை. அதென்னவோ தெரியல. அப்பவுலயிருந்து இப்படிதான் இருக்கேன் என்றார். திரு இயக்கும் சமரன் படத்தில் நடித்தபின் மீண்டும் லிங்குசாமி படத்தில் நடிக்க போகிறாராம்.

உங்களுக்கும் அவருக்கும் சண்டைன்னு… நாம் கேள்வியை முடிப்பதற்குள் இடைமறித்தவர், நானும் அவனும் ரொம்ப காலத்து பிரண்ட்ஸ். அவன் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்த காலத்திலிருந்து ஒண்ணா பழகியிருக்கோம். நீங்க கேள்விப்பட்டது ரொம்ப ராங் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum