தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இசை இளவல்’ ஜி.வி.பிரகாஷின் வளர்ச்சி – சிறப்புப் பார்வை

Go down

இசை இளவல்’ ஜி.வி.பிரகாஷின் வளர்ச்சி – சிறப்புப் பார்வை Empty இசை இளவல்’ ஜி.வி.பிரகாஷின் வளர்ச்சி – சிறப்புப் பார்வை

Post  ishwarya Fri Apr 12, 2013 2:11 pm

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் என்றாலும் தனது திறமையால் இன்று இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் ‘இசை இளவல்’ ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பல பிரபல இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது வளர்ச்சிப்பாதை பற்றி அறிந்து கொண்டால், வளரும் இளைய தலைமுறையினருக்கு அது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதால் இச்சிறப்பு செய்தியை வழங்குகிறோம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தில், “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே… கலக்குது பார் இவ ஸ்டைலே…’’ என்ற குரலுக்கு சொந்தக்காரர் இந்த ஜி.வி.பிரகாஷ். அப்போதே குழந்தை பாடகராக அறிமுகமாகி இருந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றி வந்தார். இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர் ஜீ.வி.பிரகாஷ். இப்படத்தில் இடம்பெற்ற ‘உருகுதே… உருகுதே’ பாடல் இவருக்கு புகழைத் தேடித் தந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘குசேலன்’ படத்திற்கு இசையமைத்தார். இதையடுத்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதை விட, இவர் இசையமைத்த படங்கள் வெற்றிப் படங்களாயின என்று சொன்னால் அது மிகையில்லை. ‘அங்காடித் தெரு’, ஆறு தேசிய விருதுகளை வென்ற ‘ஆடுகளம்’, பீரியட் கால படமான ‘மதராசப்பட்டினம்’ என இவர் இசையமைப்பில் வெற்றி பெற்ற படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ‘மதராசபட்டினம்’ படத்தில் இடம்பெற்ற ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே…’ பாடல் இன்றுவரை 10 லட்சம் பேர் யு டியூப் இணையதளத்தில் பார்த்து கேட்டு ரசித்திருக்கிறார்கள்.

சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ படத்தில் இவரை அமைத்த இசை அப்படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த்து. தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கும் ‘மயக்கம் என்ன’ படத்தில் இவரது இசையமைப்பு பலரது பாராட்டையும் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை அடுத்து வெளியாக இருக்கும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ பலத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கார்த்தி நடிக்கும் ‘சகுனி’, பெயரிடப்படாத புதுப்படங்கள் இவரது இசைத்தாலாட்டில் வர இருக்கின்றன.

இளையராஜாவை தனது பிரதானை இசையமைப்பாளராக வைத்திருந்த, இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் புதுப்படமான ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்திற்கு இசையமைக்கிறார். பாரதிராஜாவைப் போன்றே, இயக்குனர் பாலாவும் இளையாராஜா விரும்பிதான். ஆனால் இவர் இயக்கவிருக்கும் புதுப் படத்தில் ‘இசை இளவல்’ இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான போது இவருக்கு வயது 19. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இவர் பல மொழிகளில் இசையமைத்து இருக்கிறார். இன்னும் இசையமைக்கவும் இருக்கிறார். தற்போது இவருக்கு வயது 24. இத்தனை வயதிற்குள் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இவருக்கு ‘இசை இளவல்’ என்ற பட்டம் பொருத்தமானதுதானே.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நீரிழிவு சிறப்புப் பார்வை - இந்தியாவில் நீரிழிவு நோய்
» ஜி.வி.பிரகாஷின் 25வது திரைப்படம்
» சிறப்புப் பொருளாதார மண்டலத்தால் என்ன பிரச்சினைகள் ஏற்படும்?
» ஈழத் தமிழருக்காக தென்னிந்திய திருச்சபை சிறப்புப் பிரார்த்தனை
» தலைவர் பதவியிலிருந்து எஸ்.ஏ. சந்திரசேகரன் நீக்கம்: சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum