தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரும்பியது சோனாவின் அட்வான்ஸ் நிம்மதியான வெங்கட்பிரபு பிரதர்ஸ்

Go down

திரும்பியது சோனாவின் அட்வான்ஸ் நிம்மதியான வெங்கட்பிரபு பிரதர்ஸ் Empty திரும்பியது சோனாவின் அட்வான்ஸ் நிம்மதியான வெங்கட்பிரபு பிரதர்ஸ்

Post  ishwarya Fri Apr 12, 2013 1:54 pm

அழையாத விருந்தாளியாகிவிட்டார் சோனா. அந்த கூட்டத்தில் நான் மட்டும்தான் பொம்பளை என்று அவரே பெருமை பேசுகிற அளவுக்கு இருந்தார்கள் நண்பர்கள். ஆனால் அமைதியான குளத்தில் அண்டங்காக்காய் முங்கி எழுந்தது போல ஏகப்பட்ட கலவரங்களை கிளப்பிவிட்டு விட்டது ஒரே ஒரு டீலிங்.

வெங்கட்பிரபுவின் அடுத்த படம் எனக்குதான். இடையில் வரும் யாராக இருந்தாலும் விடமாட்டேன் என்பது போல இருந்தது அவரது பாலியல் குற்றச்சாட்டும் பகிரங்க சவால்களும். இதனால்தான் சிதறியிருக்கிறது மொத்த கூட்டமும். பிரச்சனையை சரணின் தலைமேல்தான் போட்டார் சோனா. ஆனால் வெங்கட்பிரபு, பிரேம்ஜி இருவரும் கூட சோனாவை கை கழுவியதுதான் இந்த கதையின் திடுக்கிடும் திருப்பம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இருவரது வீட்டிலுமே செம டோஸ் விழுந்ததாம். இதை தொடர்ந்து சோனாவின் நட்பை கத்தரிக்க ஒரே வழி அட்வான்சை திருப்பி கொடுப்பதுதான் என்பதை உணர்ந்து கொண்ட வெங்கட்பிரபு அவசரம் அவசரமாக ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அதில் கிடைத்த அட்வான்ஸ் பணத்தை கொண்டு சோனாவின் பாக்கியையும் செட்டில் செய்துவிட்டாராம்.

இவர் இயக்கப் போகும் இந்த புதிய படத்திற்கு அவர் பேசியிருக்கும் சம்பளம் ஆறு கோடி என்கிறது உறுதிபடுத்தப்படாத ஒரு தகவல். (எல்லாம் மங்காத்தா தந்த வரம்) இந்த புதிய படத்தின் நாயகன் சூர்யா என்றும், இவருடன் தெலுங்கு பட ஹீரோ ஒருவரும் நடிப்பதாக செய்திகள் கசிகின்றன.

இனிமேலாவது ஜாக்கிரதை பிரதர்ஸ்…

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum