தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விக்ரம், சிம்பு, தனுஷ், மாதவன் வந்துட்டாங்கடோய்ய்…!

Go down

 விக்ரம், சிம்பு, தனுஷ், மாதவன் வந்துட்டாங்கடோய்ய்…! Empty விக்ரம், சிம்பு, தனுஷ், மாதவன் வந்துட்டாங்கடோய்ய்…!

Post  ishwarya Wed Apr 10, 2013 6:10 pm

ஏழாம் அறிவு ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்தப் படம் இல்லை என்கிறார்கள் ரசிகர்கள். இம்முறை விஜய் கொஞ்சம் லாஜிக்கொடு ஆக்‌ஷன் மசாலா செய்திருக்கிறார், அதனால் படத்தில் உட்கார முடிகிறது என்கிறார்கள்.

இந்த இரண்டு படங்களிம் உண்மையான போட்டிக்கு நடுவில் வெளியான ஷாரூக்கானின் ரா ஒன் படத்தை ஆவலுடன் பார்த்த ரஜினி ரசிகர்கள், “ எந்திரன்லேர்ந்து சிட்டி ரோபோவை இரண்டு சீன்ல உருவி கிராஃபிக்ஸ் பண்ணிட்டு, நடிச்சதா பொய் சொல்றாங்க” என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

இந்த தீபாவளி களேபரத்துக்கு மத்தியில் நாம் புகுந்தா நசுங்கிட வேண்டியதுதான் என்று பின் வாங்கிய படங்கள் தற்போது அதிரடியாக அதேநேரத்தில் தைரியமாக ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறார்கள்.

தனுஷ் – ரிச்சா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் மயக்கம் என்ன படத்தை வெளியிட நவம்பர் 11- ஆம் தேதியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். சிம்பு- ரிச்சா நடிப்பில் தரணி இயக்கியிருக்கும் ஒஸ்தி படத்தை நவம்பர் 18-ஆம் தேதியன்று வெளியிட முடிவு செய்து அறிவித்தும் விட்டார்கள். அடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடிக்கும் போராளி படத்தை நவம்பர் 25-ஆம் தேதியன்று வெளியிடுவதாக அறிவித்து விட்டார்கள்.

அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ராஜபாட்டை படத்தின் பாடல்காட்சி படப்பிடிப்பு முடிந்தால் அந்தப் படம் முடிந்து, ஒரே மாதத்தில் போஸ்ட் புரடெக்‌ஷன் நடக்க இருகிறது. விக்ரம் இப்போதே டப்பிங் பேசி முடித்து விட்டாராம். இதனால் திட்டமிட்டபடி டிசம்பர் 16-ஆம் தேதி ராஜப்பாட்டையை வெளியிட இப்போதே தியேட்டர் புக்கிங் செய்து வருகிறோம் என்கிறார்கள்.

அதேபோல லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடிக்கும் வேட்டை படம் முடிந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் நடந்து வருகிறது. இதனால் டிசம்பர் 23- ஆம் தேதி வேட்டை வெளியீடு என்பதை துணிச்சலாக அறிவித்து விட்டார்கள். இந்த பெரிய படங்களுக்கு மத்தியில் புதுமுகங்கள் நடித்த இரண்டு சின்ன படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum