மோதல் நீடிப்பு ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடையா? நடிகை ரிச்சா விளக்கம்
Page 1 of 1

நடிகர்கள் சிம்புக்கும், ஜீவாவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. “கோ” படத்தில் இருந்து இவர்களுக்குள் தகராறு மூண்டது. இந்தப் படத்தில் நடிக்க சிம்புவைத்தான் இயக்குனர் கே.வி.ஆனந்த் முதலில் அணுகினார். அவர் நடிக்காததால் ஜீவாவை தேர்வு செய்தார். படம் ஹிட்டானதால் அந்த படத்தில் நடிக்க மறுத்த சிம்பு மீது அதிருப்தி எழுந்தது. சிம்பு என் நண்பன் இல்லை என்று ஜீவா அதிரடியாக பேட்டி அளித்தார். முதுகில் குத்துவதாகவும் மறைமுகமாக சாடினார்.
சிம்புவை விமர்சித்த ஜீவாவை நடிகர் ஜெய் கண்டித்தார். இவ்வாறு மோதல் நீடித்து வரும் நிலையில் ஜீவாவுடன் ஜோடியாக நடிக்க வேண்டாம் என நடிகை ரிச்சாவை, சிம்பு தடுத்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. ஜீவாவை கதாநாயகனாக வைத்து புதுப்படம் ஒன்றை அகமது இயக்குகிறார். இப்படத்துக்கு ரிச்சாவை கதாநாயகியாக தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஜீவாவுடன் நடிக்க ஒப்புக் கொண்ட ரிச்சா திடீரென மனம் மாறி மறுத்து விட்டாராம்.
ரிச்சா தற்போது சிம்பு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்து வருகிறார். சிம்புதான் ஜீவாவுடன் நடிக்க வேண்டாம் என்று தடை விதித்ததாக கிசுகிசுக்கப்பட்டது.
இதற்கு ரிச்சா விளக்கம் அளித்து கூறியதாவது:
ஜீவா படத்தில் நடிக்க என்னை யாரும் அணுக வில்லை. ஜீவாவுடன் நடிக்க கூடாது என சிம்பு தடுத்ததாக வெளியான செய்தி வதந்தி தான். படம் சம்பந்தமான என் முடிவுகளில் சிம்புவோ அல்லது வேறு யாரேனும் தலையிடுவது இல்லை என்றார். சிம்புவும் இந்த செய்தியை மறுத்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜீவாவுடன் ஜோடி சேரக்கூடாது: நடிகை ரிச்சாவுக்கு சிம்பு தடை
» டாப்சி – ரிச்சா மோதல்!
» முக்கியத்துவம் இல்லாத வேடம் கொடுத்ததால் கார்த்தி, ஜீவாவுடன் நடிக்க மறுத்தேன்: லட்சுமிராய்
» சூர்யாவுடன் நடிக்க விருப்பம்:ரிச்சா
» தனுஷ், சிம்பு நேரடி மோதல்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum