தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜீவாவின் அடுத்தடுத்த படங்கள் !

Go down

ஜீவாவின் அடுத்தடுத்த படங்கள் ! Empty ஜீவாவின் அடுத்தடுத்த படங்கள் !

Post  ishwarya Wed Apr 10, 2013 5:32 pm

டாக்டர் வி.ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மருத்துவதுறையில் சிறந்து விளங்கும் டாக்டர் வி.ராமதாஸ், தொழில் முனைவோராக பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

2006 ல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பபடும் மதிப்புமிகு பிரவசி பாரதிய விருதை இவர் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுளார். திரைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

ஜி.கே.எம்.தமிழ்குமரனோடு இணைந்து பெரும் பொருட்செலவில் புதிய படத்தை அவர் தயாரிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார்.

வாமனன் படத்தை இயக்கிய அகமது இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்த படம் செஷல்ஸ், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. ஜீவா கெளதம்மேனன் படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த படம் துவங்குகிறது.

தந்தை மகன் உறவு, நட்பு, இளமை, காதல் ஆகிய அம்சங்களை கொண்ட திரைப்படமாக இது உருவாகும் என்கிறார் இயக்குனர் அகமது. படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக நாயகன் ஜீவா கூறுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum