தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வசந்த் இயக்கத்தில் சேரன்!

Go down

வசந்த் இயக்கத்தில் சேரன்! Empty வசந்த் இயக்கத்தில் சேரன்!

Post  ishwarya Wed Apr 10, 2013 4:34 pm

பொக்‌கிஷம் படத்துக்கு பிறகு முற்றாக படம் இயக்குவதையே ஓரம்கட்டி விட்டார் சேரன். யுத்தம் செய், முரண் ஆகிய மல்டி ஸ்டாரர் படங்களில் நடித்த சேரன். அந்தப் படங்கள் வசூல் ரீதியாக தயாரிப்பாளர்களை காப்பாற்றியதோடு கனிசமாக லாபம் சம்பாதித்துக் கொடுத்ததால், தற்போது சேரனுக்கு தொடர்ந்து ஹீரோ வாய்ப்புக்கள் குவிகின்றன.

மிகச்சில படங்களே என்றாலும் தரமான படங்களைத் தந்த வசந்த் இயக்கத்தில் சேரன் நடிக்கிறார். இதுவும் ஒரு மல்டி ஸ்டாரர் படம்! மங்காத்தா படத்தில் மெல்லிய வில்லனாக நடித்த ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், சேரனுடன் மற்றோரு ஹீரோவாக நடிக்கிறார்.

இவர்கள் தவிர இன்னோரு இளம் ஹீரோவும் படத்தில் உண்டு. அவர்தான் 16 படநாயகன் மிர்ட்டி சிவா. மூன்று ஹீரோக்கள் நடிக்கும் இந்தப் படத்துக்கு அப்படி என்ன கதை என்றுதானே யோசிக்கிறீர்கள்? வசந்த் எப்போதுமே குடும்ப உறவுகளுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்…! அதனால் இம்முறை மதுரையைக் கதைக் களமாகக் கொண்டு காதல் கதையை இயக்குகிறார்…!

படத்துக்கு ‘ மூன்று பேர் … மூன்று காதல்’ என்று தலைப்பு வைத்திருகிறார்கள். யூடிவி மோசன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜோசுவா ஸ்ரீதர் இசையமைக்கலாம் என்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum