தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளைய தளபதியா? இளைய தலபதியா?

Go down

இளைய தளபதியா? இளைய தலபதியா? Empty இளைய தளபதியா? இளைய தலபதியா?

Post  ishwarya Wed Apr 10, 2013 2:43 pm

ஏற்கனவே வெற்றிபெற்ற ரெடிமேட் கதைகளில் அலாதிப் ப்ரியம் கொண்டவர் என்றால் ஜெயம் ரவியைத்தான் எல்லோரும் விரல் நீட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவரைக் காட்டிலும் இளைய தளபதி விஜய்க்கு ரீமேக் படங்கள் என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி.

தற்போது விஜய் நடிப்பில் வெளியாக ஒடிக்கொண்டிருக்கும் வேலாயுதமும், அசாத் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் என்பது அரதப் பழசான தகவல் என்றாலும், இந்த செய்தியோடு நெருங்கி தொடர்பு கொண்டது.

தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 7-ஆம் அறிவுக்கு பாப்புலர் வீடியோ கேமான “ அசாசின்ஸ் கீரீட்” டின் அடிப்படை ஐடியா… அதாவது ஹீரோவின் டி.என்.ஏவைத்தூண்டி வரலாற்றுக்குள் திரும்ப நுழைவது என்பதை அத்தனை அழகாக லபக்கி அதை தமிழ்படுத்தியிருந்தார் ஏ.ஆர். முருகதாஸ்!

ஆனால் நம்ம இளைய தளபதி விஜயோ, அவரைச் சார்ந்தவர்களோ அத்தனை புத்திசாலித்தனமாக யோசிக்க முடியாது என்பதால், குறைந்த பட்சம், அசாசின் கீரீட்டின் ஹீரோ கெட் அப் போஸ்டர் டிசைன்களை அப்படியே வேலாயுதம் சூப்பர் ஹீரோ கேரக்டருக்கு பயன்படுத்திக் கொண்டார்.

ஆனால் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்த ஆண்டு இளைய தளபதி நடிக்க இருக்கும் யோஹன் –அத்தியாயம் ஒன்று படம் எந்த ஆங்கிலப் படத்தின் ரீமேக் என்பதை விரைவில் கோலிவுட் நிருபர்கள் மோப்பம் பிடித்து விடுவார்கள் என்பது தெரிந்த விஷயம்தான்.

ஆனால் அதற்கு முன்பு, யோஹன் படத்தின் போஸ்டர் டிசைனை பார்த்தால்தான்.. இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த பட்டத்தை ‘இளைய ‘தல’பதி என்று மாற்றிவிடலாம் என்று தோன்றுகிறது. காரணம் ஹாலிவுட் ஹீரோ வில் ஸ்மீத் நடித்த ’அ ஐம் லெஜெண்ட்’ படத்தின் போஸ்டரை எடுத்த இயக்குனர் கௌதம் மேனன், வில் ஸ்மீத்தின் தலையை மட்டும் அதிலிருந்து நீக்கி விட்டு, நமது இளைய தளபதியின் தலையைப் பொருத்தி விட்டார்.

போஸ்டரிலேயே 99% சதவிகிதம் காப்பியடிக்கும் கௌதம் கதையில் 100 % அடிக்கமாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை! மொத்தத்தில் இளைய தலபதி விஜய்யின் நிலமைதான் பாவம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum