தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விக்ரமின் தாண்டவம் தொடங்கியது!

Go down

விக்ரமின் தாண்டவம் தொடங்கியது! Empty விக்ரமின் தாண்டவம் தொடங்கியது!

Post  ishwarya Tue Apr 09, 2013 5:42 pm

ராஜபாட்டை படத்தை தொடர்ந்து, நடிகர் விக்ரம், மீண்டும் டைரக்டர் விஜய் கூட்டணியில் நடிக்கும் தாண்டவம் படத்தின் பூஜை சென்னையில் தொடங்கியது. கிரீடம், மதராசபட்டிணம், போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் விஜய், விக்ரம்மை வைத்து தெய்வத்திருமகள் என்ற ஹிட் படத்தை கொடுத்தார். இந்நிலையில் மீண்டும் விக்ரம்மை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு தாண்டவம் என்று பெயரிட்டுள்ளனர்.

படத்தில் விக்ரமுடன் அனுஷ்கா, எமிஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். கூடவே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்கிறார். இப்படத்தின் பூஜை ஏ.வி.எம்., ஸ்டுடியோவின் மிக எளிமையான முறையில் நேற்று நடந்தது. இந்தவிழாவில் நடிகர் விக்ரம், டைரக்டர் விஜய் தவிர பூர்ணிமா, எடிட்டர் ஆண்டனி, யு.டி.வி. தனஞ்செயன், நீரவ் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படம்குறித்து டைரக்டர் விஜய் பேசும்போது, என்னுடைய முந்தைய படங்களை விட இந்தபடம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. காட்டிலும் விக்ரமிற்கு இந்தபடம் முற்றிலும் வித்தியாசமாக இருக்குமாம். படத்தின் கேரக்டருக்கு அவர் இப்பவே உழைக்க ஆரம்பித்துவிட்டார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். டில்லியில், ஜனவரி மாதம் சூட்டிங் ஆரம்பமாகிறது. தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 60நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum