தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் புதுப்படம்

Go down

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் புதுப்படம் Empty அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் புதுப்படம்

Post  ishwarya Tue Apr 09, 2013 4:59 pm

தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்குமார், தற்போது தனது 51-வது படமான ‘பில்லா 2′ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை அடுத்து யார் படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்ற ஆவல் அவரது ரசிகர்களிடையே எழுந்திருந்தது. அதற்கு தற்போது அதிகாரப்பூர்வமாக விடை கிடைத்துள்ளது;

பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் அஜித்குமார் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ‘சிறுத்தை’ பட இயக்குனரான சிவா இயக்குகிறார். பல பிரமாண்ட படங்களைத் தயாரித்த இந்நிறுவனத்தின் நிறுவனரும், அதிபருமான மறைந்த பி.நாகிரெட்டியின் 100வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் இப் படம் தயாரிக்கப்படுகிறது.

இப்புதிய படத்தின் முறையான அறிவிப்பு நேற்று விஜயா ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது. பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதிரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். 2012- ல் தொடங்கவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் ‘பில்லா’ படத்தை இயக்கிய விஷ்ணு வர்த்தன் விரைவில் அஜித்துடன் இணைந்து படம் செய்ய இருப்பதாக தனது டுவிட்டர் இணைய பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum