தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? – தமன்னா

Go down

தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? – தமன்னா Empty தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? – தமன்னா

Post  ishwarya Mon Apr 08, 2013 1:38 pm

தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? – தமன்னா 10-tamanna300தமிழ்ப் படங்களில் நடிக்காமல் போனதற்குக் காரணம், நல்ல கதை அமையாததுதான் என்று தமன்னா தெரிவித்தார்.

தமிழில் கடந்த ஆண்டு வரை முன்னணியில் இருந்த நடிகை தமன்னா, இந்த ஆண்டு கையில் ஒரு படம் கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

அவர் முழுவதுமாக தெலுங்கிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் நடிகர் ஒருவருடன் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விதான் இந்த
நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் தமன்னா இதுகுறித்து கருத்து
கூற மறுத்துவந்தார்.

இந்த நிலையில் தமிழில் மீண்டும் எப்போது நடிப்பார் என்பது குறித்து
அவரிடம் கேட்டபோது, “எனக்கு படங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை. தரமான
படங்களாக இருக்க வேண்டும். எந்த மொழியாக இருந்தால் என்ன…

சில நடிகைகள் ஒரே நேரத்தில் ஏழெட்டு படங்களில் நடிக்கின்றனர். அதில்
எனக்கு உடன்பாடில்லை. அந்த நடிகைகளை போல் நான் இருக்கமாட்டேன். நிறைய
படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பது பயன்தராது.

ஏற்கனவே கைவசம் உள்ள தெலுங்கு படங்களை முடிக்காமல் மகேஷ்பாபு ஜோடியாக
நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் இதனால் தயாரிப்பாளர்கள். என் மேல் கோபமாக
இருப்பதாகவும் வெளியான தகவல் உண்மையானது அல்ல.

மகேஷ்பாபுவுடன் நடிப்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை. தமிழ் படங்களை
நான் ஒதுக்கவில்லை. நல்ல கதை, நம்பிக்கையான இயக்குநர்களுக்காக
காத்திருக்கிறேன்,” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிக படங்களில் நடிக்காதது ஏன்?
» ராவணன் தமிழ்ப் படத்தில் நடிக்காதது ஏன்? – அபிஷேக் விளக்கம்
» “தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்” – தமன்னா
» நடிகர், நடிகைகளுக்கு தமன்னா வேண்டுகோள்: தரமற்ற பொருட்களின் விளம்பர படங்களில் நடிக்க கூடாது
» 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum