தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் மருதநாயகமா…? அதில் ரஜினியுமா…? கமல் தரப்பு மறுப்பு!!

Go down

மீண்டும் மருதநாயகமா…? அதில் ரஜினியுமா…? கமல் தரப்பு மறுப்பு!! Empty மீண்டும் மருதநாயகமா…? அதில் ரஜினியுமா…? கமல் தரப்பு மறுப்பு!!

Post  ishwarya Fri Apr 05, 2013 6:17 pm

கமல்ஹாசன் தன்னுடைய கனவு படமான மருதநாயகம் படத்தை மீண்டும் கையில்
எடுக்கப்போவதாகவும், அதில் முக்கிய ரோலில் ரஜினியும் நடிக்க போவதாகவும்
வந்த தகவலை கமல்ஹாசன் மறுத்துள்ளார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில்,
1997-ல் கமல்ஹாசன் மருதநாயகம் என்ற படத்தை இங்கிலாந்து ராணி எலிசபத்தை
வைத்து பிரம்மாண்டமாக தொடங்கினார். சரித்திரத்தை பின்னணியாக கொண்டு உருவான
இப்படம், பின்னர் பட்ஜெட் பிரச்னையால் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து
இப்படத்தை எடுக்க கமல்ஹாசன் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் முடியவில்‌லை.
இந்நிலையில் கமல்ஹாசன் மீண்டும் “மருதநாயகம்” படப்பிடிப்பை துவங்கப்
போவதாகவும், இதில் ரஜினியும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும்
செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இதனை கமல் தரப்பு மறுத்துள்ளது.
இதுகுறித்து கமல் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது
கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்‌தில் பிஸியாக இருக்கிறார். அதற்கு அடுத்து
தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கிறார். மற்றபடி அவர் மீண்டும்
மருதநாயகம் படத்தை துவங்கபோவதாகவும், அதில் ரஜினி நடிக்கப்போவதாகவும் வந்த
செய்தியில் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum