தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை சமந்தாவுடன் விரைவில் திருமணம் நடிகர் சித்தார்த் பேட்டி

Go down

நடிகை சமந்தாவுடன் விரைவில் திருமணம் நடிகர் சித்தார்த் பேட்டி Empty நடிகை சமந்தாவுடன் விரைவில் திருமணம் நடிகர் சித்தார்த் பேட்டி

Post  amma Fri Apr 05, 2013 5:59 pm

சென்னை,

காதலர்களாக இருந்து வரும் நடிகர் சித்தார்த்தும், நடிகை சமந்தாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.

காதல்

நடிகர் சித்தார்த்தும், நடிகை சமந்தாவும், 'ஜபர்தஸ்த்' என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு சமந்தா குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு எழுந்தாலும், குடும்பத்தினருடன் சமந்தா பேசி, திருமணத்துக்கு சம்மதம் வாங்கி விட்டார். அதைத்தொடர்ந்து சித்தார்த்-சமந்தா ஜோடி தங்கள் குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டார்கள்.

திருமணம்

சித்தார்த்-சமந்தா திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது. இதுதொடர்பாக சித்தார்த் அளித்த பேட்டி வருமாறு:- ''நான் திருமணத்துக்கு தயாராகி வருகிறேன். குடும்பம், குழந்தைகள் என்று வாழ ஆசைப்படுகிறேன். என் ஆசை விரைவில் நிறைவேறும் என்று கருதுகிறேன். என்னை சில நடிகைகளுடன் இணைத்து வதந்திகளை பரப்பினார்கள். அதில் உண்மை இல்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.

உரிமை இல்லை

என் குடும்பத்தினர் எப்போதுமே என்னைப் பற்றி வந்த வதந்திகளை நம்பியதில்லை. என் சொந்த வாழ்க்கை பற்றிய தகவல்களை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. அது என் சொந்த விஷயம். என் மீது தீவிரமான அன்பு கொண்ட ரசிகர்களுக்கு கூட, என் சொந்த விஷயத்தில் தலையிட உரிமை இல்லை.
நான் நடித்த படம் நன்றாக இருந்தால் ரசியுங்கள். அதைப்பற்றி பத்து பேர்களிடம் சொல்லுங்கள். அதேபோல் படம் சரியில்லை என்றால், சரியில்லை என்று உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. என் சொந்த வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.''
இவ்வாறு சித்தார்த் கூறினார்.

மணிரத்னம் உதவியாளர்

அவர் மேலும் கூறியதாவது:-
''நான், சென்னையில் பிறந்தவன். தமிழன். சென்னையிலும், டெல்லியிலும் வளர்ந்தேன். என் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் 37 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சின்ன வயதில் எனக்குள் என் தாயார் இசை ஆர்வத்தை ஏற்படுத்தினார். அதுவே என்னை சினிமாவுக்குள் அழைத்து வந்தது. டைரக்டர் மணிரத்னத்திடம் உதவி டைரக்டராக சேர்ந்தேன்.

இந்தி படங்களை விட, தமிழ் படங்களின் தரம் உயர்ந்து இருக்கிறது. ஒரு இந்தி படத்தை குறைந்தபட்சம் ரூ.100 கோடி செலவில் தயாரிக்கிறார்கள். தமிழ் படங்கள் சில கோடி செலவில்தான் தயாராகின்றன. நட்சத்திர நடிகர்கள் இல்லாமல், புதுமுகங்களை நடிக்க வைத்து ஜெயித்து காட்டுகிறார்கள்.''
மேற்கண்டவாறு சித்தார்த் கூறியிருக்கிறார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum