தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜீவாவுடன் ஜோடி சேருகிறார் த்ரிஷா!

Go down

ஜீவாவுடன் ஜோடி சேருகிறார் த்ரிஷா! Empty ஜீவாவுடன் ஜோடி சேருகிறார் த்ரிஷா!

Post  ishwarya Fri Apr 05, 2013 4:41 pm

புதிய படமொன்றில் இளம் நடிகர் ஜீவாவுடன் நடிகை த்ரிஷா ஜோடியாக நடிக்கவுள்ளார். நடிகர் ஜெய்யை வைத்து வாமணன் படத்தை இயக்கியவர் டைரக்டர் அஹமது. அவர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் நாயகியாக நடிகை த்ரிஷா நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இதனை நடிகை த்ரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிபடுத்தியிருக்கிறார். காதல், காமெடி, செண்டிமென்ட் கலந்த இப்படம் தனக்கு முக்கிய படமாக இருக்கும் என்றும் நடிகை த்ரிஷா கூறியிருக்கிறார்.

த்ரிஷாவுக்கு வயதாகி விட்டது; தமிழ்ப்படங்களில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்றெல்லாம் பலவாறான செய்திகள் சமீப காலமாக வெளியாகி வருகின்றன. இந்த செய்திகளுக்கு ஜீவா பட செய்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum