தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ப்ரியாமணி மார்கெட் சரிந்ததா?

Go down

 ப்ரியாமணி மார்கெட் சரிந்ததா? Empty ப்ரியாமணி மார்கெட் சரிந்ததா?

Post  ishwarya Thu Apr 04, 2013 5:15 pm

ப்ரியாமணி சமீபத்தில் நடித்த பிரஞ்சியத்தன் என்ற படம் தோல்வி அடைந்ததையடுத்து அம்மணியின் மார்க்கெட் சரிந்து விட்டதாக மலையாள திரையுலகில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழில் ராசியில்லாத நடிகையாக வலம் வந்த ப்ரியாமணி, பருத்திவீரன் படம் மூலம் வெற்றி நாயகியானார். முத்தழகு கேரக்டர் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து மலையாள திரையுலகிற்கு சென்றார் ப்ரியாமணி. தமிழ் ரசிகர்களுக்கு காட்டாத கவர்ச்சியையெல்லாம் மலையாள ரசிகர்களுக்கு காட்டி முன்னணி நாயகியாக வலம் வந்த ப்ரியாமணியின், மார்க்கெட் இப்போது மலையாளத்திலும் சரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான பிரஞ்சியத்தன் படம் தோல்வி அடைந்ததுள்ளது. இதனால் பிரியாமணி மார்க்கெட் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மம்முட்டி நடிக்கும் `தப்பன்னா படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ப்ரியாமணி, அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி ப்ரியாமணி அளித்துள்ள பேட்டியில், மம்முட்டி படத்தில் என்னை ஒப்பந்தம் செய்து விட்டு நீக்கி விட்டதாக வெளியான செய்திகள் வதந்திதான். அந்த படத்தில் நடிக்கும்படி என்னிடம் அணுகவில்லை, என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum