தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா!

Go down

டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா! Empty டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா!

Post  ishwarya Wed Apr 03, 2013 1:46 pm

தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் தனக்கு பிடிக்கும் என்றும், ஆனால் அப்படத்த‌ில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். பிரபுதேவா உடனான காதல் முறிவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸி நடிகையாகிவிட்ட நயன்தாராவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் இருந்து நிறைய ஆபர்கள் தேடி வருகிறது. இந்நிலையில் இந்தியில் வித்யாபாலன் நடிப்பில், சக்கபோடு போட்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் இப்போது தமிழ், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. மேலும் இப்படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், படத்தி்ல் கவர்ச்சி கொஞ்சம் அதிகம் என்பதால் அவருக்கு ரூ.2.5 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை நயன்தாரா மறுத்துள்ளார்.

இதுகுறித்து நயன்தாரா கூறியுள்ளதாவது, வித்யாபாலன் நடித்த தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கும் ரொம்ப பிடிக்கும். இப்படத்தின் ரீ-மேக்கில் நடிக்க இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அப்படியே யாரும் என்னை அணுகினாலும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. மேலும் இப்படத்தில் நான் நடிக்க போவதாகவும், அதற்காக ரூ.2.5 கோடி சம்பளம் பெற்றதாகவும் வந்த செய்தியும் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» “தி டர்ட்டி” பிக்சர்ஸ்.. வரைமுறைகளை தாண்டி நடித்திருக்கிறேன்!
» ஹாங்காங் திரைப்பட விழாவில் 'டர்ட்டி பிக்சர்ஸ்' நாயகி!
» தமிழில் டர்ட்டி பிக்சர்ஸ் ரீ-மேக்! சில்க்காக அனுஷ்கா…!
» டர்ட்டி பிக்சர்ஸ்’ வித்யா பாலனின் ‘ஹாட்’ படங்கள் வெளியீடு
» சில்க்கின் வாழ்க்கைக் கதையான டர்ட்டி பிக்சர்ஸ் ஆபாசமாக இருக்காது – வித்யா பாலன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum