தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை தீப்தி கால் முறிந்தது: ஒட்டகத்தில் இருந்து தவறி விழுந்தார்

Go down

 நடிகை தீப்தி கால் முறிந்தது: ஒட்டகத்தில் இருந்து தவறி விழுந்தார் Empty நடிகை தீப்தி கால் முறிந்தது: ஒட்டகத்தில் இருந்து தவறி விழுந்தார்

Post  ishwarya Tue Apr 02, 2013 6:13 pm

‘துள்ளி விளையாடு’ படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் தீப்தி. நாயகனாக யுவராஜ் நடிக்கிறார். வின்சென்ட் செல்வா இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த பிரியமுடன், மற்றும் யூத், ஜித்தன் போன்ற படங்களை டைரக்டு செய்துள்ளார்.

‘துள்ளி விளையாடு’ படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்து வருகிறது. அங்குள்ள தார் பாலைவனத்தில் கொளுத்தும் வெயிலில் காட்சிகள் எடுக்கப்படுகின்றன. யுவராஜ், தீப்தி காதல் காட்சி ஒன்றை இயக்குனர் படமாக்கினார்.

பாலைவன மணலில் தீப்தி ஒட்டகத்தில் பயணம் செய்வது போன்ற பின்னணியில் இந்த காதல் காட்சியை எடுத்தனர். அப்போது ஒட்டகம் திடீரென வேகம் பிடித்தது. இதனால் தீப்தி பயந்து அலறியபடி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டு காலிலும் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வின்சென்ட் செல்வா கூறும்போது, ‘ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள ஒட்டகங்கள் காரின் வேகத்தை மிஞ்சும் அளவுக்கு வேகமாக ஓடக்கூடியவை. அந்த ஒட்டகத்தில் தீப்தியை அமர வைத்து படப்பிடிப்பை நடத்தியபோது அது திடீரென ஓடியது. தீப்தி தூக்கி வீசப்பட்டார். இதனால் அவரது வலது காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் நாங்கள் அதிர்ச்சியாகி விட்டோம்’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum