தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படப்பிடிப்பில் ஒட்டகத்தில் இருந்து விழுந்த நாயகி தீப்தி!

Go down

படப்பிடிப்பில் ஒட்டகத்தில் இருந்து விழுந்த நாயகி தீப்தி! Empty படப்பிடிப்பில் ஒட்டகத்தில் இருந்து விழுந்த நாயகி தீப்தி!

Post  ishwarya Tue Apr 02, 2013 6:04 pm

இளையதளபதி விஜய் நடித்த ப்ரியமுடன் படத்தை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. இந்த படத்தின் மூலம் விஜய்க்கு பெரிய பிரேக் கிடைத்தது. தற்போது இவர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படம் துள்ளி விளையாடு. படத்தின் நாயகனாக யுவராஜ், நாயகியாக தீப்தி ஆகியேர் அறிமுகம் ஆகின்றனர். ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரிப்பில் வேகமாக வளர்ந்து வரும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்தது. ஒட்டகத்தில் ஹீரோயின் சவாரி போவது போன்ற பின்னணியில் ஒரு காதல் காட்சியைப் படமாக்கியிருக்கிறார் வின்சென்ட் செல்வா. அப்போது திடீரென ஒட்டகம் வேகம் பிடிக்க, பயத்தில் அலறியபடி நாயகி தீப்தி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் வின்சென்ட் செல்வா கூறுகையில் “ஏற்கெனவே விஜய் நடித்த ப்ரியமுடன் படத்தின் பெரும் பகுதியை ராஜஸ்தானில் எடுத்திருக்கிறேன். இந்த முறை துள்ளி விளையாடு படத்துக்காக ராஜஸ்தான் சென்றோம். கதாநாயகி தீப்தி நடித்தது ஒரு காதல் காட்சி. அந்தக் காட்சியில் கதாநாயகி ஒட்டகத்தில் வருவது போல எடுக்க நினைத்தோம். ஆனால் ஒட்டகத்தின் வேகத்தில் அவர் தூக்கி வீசப்பட்டுவிட்டார். வலது காலில் பலத்த அடி. காலில் லேசான எலும்பு முறிவு வேறு. அவர் சரியான பிறகு, அந்தக் காட்சியை வேறு மாதிரி எடுத்தோம்,” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  நடிகை தீப்தி கால் முறிந்தது: ஒட்டகத்தில் இருந்து தவறி விழுந்தார்
»  படப்பிடிப்பில் மயங்கி விழுந்த விஷ்ணுப்ரியா
» ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த பியா, பிந்துமாதவி!
» இயக்குனர் அவதூறு பரப்புகிறார்: படப்பிடிப்பில் இருந்து ஓடவில்லை; நடிகை சாந்த்ரா மறுப்பு
» சம்பந்தமில்லாமல் எப்படிங்க கவர்ச்சி காட்டுவது… சலித்துக் கொள்ளும் தீப்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum