தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாரா, திரிஷா, தமன்னாவுக்கு சிறந்த நடிகைகளுக்கான ‘சந்தோஷம்’ விருது

Go down

நயன்தாரா, திரிஷா, தமன்னாவுக்கு சிறந்த நடிகைகளுக்கான ‘சந்தோஷம்’ விருது Empty நயன்தாரா, திரிஷா, தமன்னாவுக்கு சிறந்த நடிகைகளுக்கான ‘சந்தோஷம்’ விருது

Post  ishwarya Mon Apr 01, 2013 6:09 pm

தென்னிந்திய மொழி படங்களில் சாதனை படைத்த நடிகர்- நடிகைகளுக்கு ‘சந்தோஷம்’ விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகைகள் நயன்தாரா, திரிஷா, தமன்னா மூவரும் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றனர்.

நயன்தாரா தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்த ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ படம் வெற்றிகரமாக ஓடியது. அப்படம் தமிழ், மலையாளம் மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன. இந்தியிலும் டப்பிங் ஆகிறது. இப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு ஏற்கனவே நிறைய விருதுகள் கிடைத்தன. தற்போது பிரபலமான ‘சந்தோஷம்’ விருதையும் பெற்றுள்ளார்.

நடிகர் கமலஹாசன் விழாவில் பங்கேற்று இந்த விருதை வழங்கினார். இதுபோல் திரிஷாவும் விருது பெற்றார். 10 வருடமாக திரையுலகில் நிலைத்து இருப்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. திரிஷா இதுவரை 48 படங்களில் நடித்துள்ளார். மேலும் 3 படங்கள் கைவசம் உள்ளன. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து விட்டார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கினர். அவரும் கமலஹாசனிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து தமன்னாவும் சிறந்த நடிகை விருதை பெற்றார். இவரும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். மூவரும் விருது பெற்றபின் கைகளை பிடித்து நட்பை பரிமாறிக்கொண்டனர். போட்டோவுக்கும் சேர்ந்து போஸ் கொடுத்தார்கள்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். நடிகை சினேகா கணவர் பிரசன்னாவுடன் விழாவில் கலந்து கொண்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘சிறந்த ஜோடி நயன்தாரா – பிரபு தேவா’ – கேலிக்கூத்தான ஒரு விருது!
» தமன்னாவுக்கு சாந்தாராம் விருது
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது
» பிலிம்பேர் விருது: இலியானா சிறந்த அறிமுகம்… வித்யா பாலன் சிறந்த நடிகை
» தேசிய விருது அறிவிப்பு: சிறந்த நடிகை வித்யாபாலன் – சிறந்த தமிழ் படம் வாகை சூட வா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum