தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டைரக்டர் ஷங்கருக்கு நன்றி! ஸ்ரீகாந்த் சிலிர்ப்பு!!

Go down

டைரக்டர் ஷங்கருக்கு நன்றி! ஸ்ரீகாந்த் சிலிர்ப்பு!! Empty டைரக்டர் ஷங்கருக்கு நன்றி! ஸ்ரீகாந்த் சிலிர்ப்பு!!

Post  ishwarya Mon Apr 01, 2013 1:30 pm

வெற்றியின் ரகசியத்தை எனக்கு சொல்லிக் கொடுத்த டைரக்டர் ஷங்கருக்கு நன்றி, என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ஷங்கரின் நண்பனுக்கு பிறகு புதிய பரிமாணத்துக்கு மாறியிருக்கிறார் ஸ்ரீகாந்த். நண்பனுக்குப் பிறகு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பாகன். இதில் அவர் ஹீரோவாக நடித்துள்ளார்.

பாகன் படத்தில் நடித்தது குறித்து ஸ்ரீகாந்த் அளித்துள்ள பேட்டியில், பாகன் ஒரு ரொமான்டிக் காமெடி படம். இயக்குநர் அஸ்லம் ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படத்தில் தந்திருக்கிறார். நிச்சயமாக நீங்கள் என்ஜாய் பண்ணும் அளவுக்கு படம் இருக்கும். பாகன் என்றால் யானை உடனே நினைவுக்கு வரும். ஆனால் இங்கே சைக்கிளுக்குப் பாகனாக இருக்கும் ஒருவனைப் பற்றிய கதை இந்தப் படம். தன் வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட ஒரு சைக்கிள் மீது அந்த இளைஞன் வைத்திருக்கும் அன்பு, காட்டும் அக்கறை படத்தில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் கதையைக் கேட்குமாறு இயக்குநர் அமீர்தான் சிபாரிசு செய்தார். மிக அழகான ஸ்கிரிப்ட். அமீர் படத்தில் வேலை பார்த்த திருப்தியும் அனுபவமும் எனக்கு அஸ்லம் மூலம் கிடைத்தது.

இன்றைக்கு என்னைப் பார்க்கும் அனைவரும் நான் ரொம்ப ஸ்லிம்மாக, பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் இருப்பதாகக் கூறிப் பாராட்டுகிறார்கள். நியாயமாக இதற்கு நான் இயக்குநர் ஷங்கருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். வயதுக்கு ஏற்ற வேடங்களைச் செய்வதுதான் வெற்றியைத் தரும் என்று அவர் எனக்குக் கூறியதை வேதவாக்காக எடுத்துக் கொண்டேன், என்று கூறியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எந்திரன் கதை – ஷங்கருக்கு போலீஸ் சம்மன்!
» இலங்கை அதிபருடன் விருந்து சாப்பிட்ட அசினை புதுபடத்தில் நடிக்க வைக்கக்கூடாது: ஷங்கருக்கு கோரிக்கை
» எந்திரன் கதைத் திருட்டு தொடர்பாக ரூ. 1 கோடி கேட்டு வழக்கு – கலாநிதி மாறன், ஷங்கருக்கு நோட்டீஸ்
» ஜீவா உழைப்பு : தயாரிப்பாளர் சிலிர்ப்பு!
» ஷங்கரின் ‘ஐ’.. பவர் ஸ்டாரின் ‘ஐ’.. எப்படி சொன்னா ஷங்கருக்கு பிடிக்கும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum