தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிண்டி பாபா கோவில்

Go down

கிண்டி பாபா கோவில் Empty கிண்டி பாபா கோவில்

Post  meenu Mon Apr 01, 2013 12:26 pm

கிண்டி பாபா கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில். ரெயில்வே ஸ்டேஷன் அருகே அமைந்துள்ள இந்த ஸ்ரீ சத்ய சாயி மண்டலி கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். ஸ்ரீசத்ய சாயி பாபா கோவிலில் உள்ள பாபா போட்டோக்கள், சிம்மாசனம் ஆகியவற்றில் இருந்து விபூதி உருவாகி அவ்வப்போது வந்து கொண்டே இருப்பது தனிச் சிறப்பு.

ஷீரடியில் பாபாவுக்கு சிலை அமைக்கப்படுவதற்கு முன்பே கிண்டியில் பாபாவுக்கு சிலை வைத்து பூஜை நடந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன. கிண்டி பாபா மந்திரத்தில் சாயி விக்ரஹத்தோடு வேறிரு தெய்வீக சின்னங்களும் உள்ளன. ஒன்று, துணியில் பதிந்த ஷீரடிநாதரின் சீரடிகள், பிரதிஷ்டை முடிந்து அல்லிக்கேணி திரும்பியவுடன் ஸ்வாமி ஒரு கைக்குட்டை மீது நின்றார்.

பெண்களுடையது போன்ற இவரது சிறிய திருவடிகளுக்கு பதில் அத்துணியில் ஷிரடி பாபாவின் பெரிய பாதங்கள் பதிந்திருந்தன. இப்பாத அடையாளம் கொண்ட வஸ்திரம் பாபா கோவிலில் உள்ளது. இன்னொரு தெய்வீக சின்னம், பிரதிஷ்டைக்கு 4 நாட்களுக்கு பின் ஸ்வாமி சங்கல்ப மாத்திரத்தில் சிருஷ்டித்த ஸ்படிகலிங்கம்.

40 வருடங்களுக்கு முன்பு, கிண்டி கோவிலில் அகண்ட பஜனை நடந்தபோது சற்றும் எதிர்பாராதவண்ணம் அதில் ஸத்ய ஸியிலே கலந்து கொண்டு பஜனை முடிந்ததும் ஊரை விட்டு புறப்பட்டு விட்டார். இந்த ஆனந்தத்தை லோகநாதரின் மகள் பர்த்தியில் உள்ள தோழிக்கு எழுதினார். அதற்கு அந்த தோழி எழுதிய பதிலில் ஆச்சர்யம் இருந்தது.

காரணம் அன்றைய தினம் பாபா பர்த்தியிலேயேதான் இருந்தாராம். கிண்டி ஆலயத்தில் பாபாவே மீண்டும் சக்கரம், நவரத்தினம், போட்டு சாந்நித்தியத்தை புதுப்பித்தார். 1973 பிப்ரவரி 3-ந்தேதி ஆலய வெள்ளி விழா வருட தொடக்கத்தன்று விஜயம் செய்து ஓர் அற்புத ஸ்தம்பத்தையும் திறந்துள்ளார்.

4 பக்கங்களிலும் விநாயகர், முருகர், கண்ணன், தட்சிணாமூர்த்தி உருவங்களை கொண்ட இத்தூணில் ஸ்வாமியின் உபதேசங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு உண்டியல் கிடையாது. நன்கொடையும் பெறுவதியில்லை.

இங்கு லட்சுமி, பரமசிவன், ஆஞ்சநேயர், ராமர் பட்டாபிஷேகம், நவக்கிரகம், ஸ்ரீசத்யசாயி பாபா ஸ்தூபி, லோகநாத முதலியார் ஜீவ சமாதி, சத்திய நந்தசித்தர்ஜீவ சமாதி தியான மண்டபம், பாம்பு புற்று, பஜனை மண்டபம் உள்ளது. பாபாவுக்காக கட்டப்பட்ட அறையின் மேல் கூரை ஆஸ்பெஷ்டாஸ் ஷீட்டாக இருந்தாலும் கோடை காலத்திலும் ஏசி அறை போல் குளுகுளு என உள்ளது ஆச்சரியமானதாகும்.

தினமும் காலை 6 முதல் 8.30 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணி வரையும், வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 12.30 மணி வரையும் மாலை 4 முதல் 9 மணி வரையும் பாபா தரிசனம் நடைபெறுகிறது. வெளியில் இருந்து அன்னதானம் கொண்டு வந்து வழங்குகிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum