தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகு தலம் - திருநாகேஸ்வரம் ஸ்தல வரலாறு...

Go down

ராகு தலம் - திருநாகேஸ்வரம் ஸ்தல வரலாறு... Empty ராகு தலம் - திருநாகேஸ்வரம் ஸ்தல வரலாறு...

Post  birundha Sun Mar 31, 2013 12:42 pm

சுசீல முனிவரின் மகன் சுகர்மனை நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர். தக்ககனை மானிடனாக பிறக்கும் படி சாபம் கொடுத்தார். இந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, காசிபர் என்ற முனிவரிடம் வழிகேட்டான். அவர் பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்தால் சாபம் நீங்கும் என்றார். அதன்படி தக்ககன்,பூமிக்கு வந்து, லிங்கபூஜை செய்தான்.

அவனுக்கு காட்சி தந்த சிவன் சாப விமோசனம் அளித்தார். இதனால் சிவனுக்கு "நாகநாதர்'' என்ற பெயர் ஏற்பட்டது. பாம்புடன் சம்பந்தப்பட்ட கோயில் என்பதால் நவக்கிரஹங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழி பட தன் தேவியருடன் வந்தார். இத்தலத்தின் அழகில் மயங்கி, இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில் ராகுவுக்கு அவரது மனைவியருடன் இணைந்திருக்கும் அனுக்கிரஹ மூர்த்தியாக சிலை வடிக்கப்பட்டு தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மங்கள ராகு:-...இங்கே ராகு மங்கள ராகுவாக அருளுகிறார். பொதுவாக ராகு, மனித தலை, நாக உடலுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் முழுமையாக மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம் இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற தேவியர் உள்ளனர்.

பாலாபிஷேகம்:-.. நாகதோஷம் உள்ளவர்கள் ராகுவிற்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். அப்போது பால் லேசான நீல நிறத்தில் மாறும். தினமும் காலை 9.30,11.30 மாலை 5.30 மற்றும் ராகு காலங்களில் பால பிஷேகம் நடக்கிறது. இதற்கு கட்டணம் செலுத்தி பாலபிஷேகம் செய்து கொள்ளலாம்.

இருப்பிடம்:-...கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 5 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது. பஸ் வசதி உண்டு. நடை திறப்பு: காலை - 6.00-12.45 மணி மாலை - 4.00-8.30 மணி
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராகு தலம் - திருநாகேஸ்வரம் ஸ்தல வரலாறு...
» ராகு தலம் - திருநாகேஸ்வரம் ஸ்தல வரலாறு...
» 2ம் தேதி ராகு பெயர்ச்சி திருநாகேஸ்வரம் கோயிலில் 7 ராசிகளுக்கு பரிகாரம்
»  2ம் தேதி ராகு பெயர்ச்சி திருநாகேஸ்வரம் கோயிலில் 7 ராசிகளுக்கு பரிகாரம்
» திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் ராகு - கேது பெயர்ச்சி விழா பரிகார ராசியினர் திரண்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum