தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் – இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை

Go down

கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் – இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை Empty கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் – இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை

Post  ishwarya Sat Mar 30, 2013 6:04 pm

சென்னை: ஈழத் தமிழர்களின் தியாகத்தைப் போற்றும் நவம்பர் மாதத்தில் இசைஞானி இளையராஜா கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று இயக்குநர் ஆர் கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
ஈழத்திலே தமிழர்களின் உரிமைக்காகவும், சுகந்திரத்திற்காகவும் தமிழ்பெண்ணின் மானத்தை காப்பதற்காகவும் தன்னுயிர் ஈந்த புறநானூற்றைப் புரட்டிப்போட்ட மாவீரர்களின் அளப்பரிய தியாகிகளை ஆண்டுதோறும் நினைவுக்கூரும் மாதந்தான் நவம்பர் மாதமாகும்.
பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த இந்த மாவீரர்கள் கடந்த 50 வருட§களாக ஈழத்தமிழர் விடுதலைக்காகவும், நம் சந்ததியின் சுதந்திரத்திற்காகவும் தங்களின் இளமைக்கனவுகளையும், உற்றார்-பெற்றோரையும் மறந்து தங்களையே ஆகுதியாக்கி வீர காவியமானவர்கள் ஆவார்கள்.
வாழவேண்டிய வயதிலே அன்பு மனைவியையும், ஆருயிர்க் கணவனையும், மழலைச் செல்வங்களையும் மறந்து மண்விடுதலைக்காக மரணித்திருக்கின்றார்கள். இப்படி ஆணும் பெண்ணும் சரிசமமாக வீரத்துடன் போராடி காற்றோடு காற்றாகக் கலந்துபோன மாவீரர்களைப் போற்றுகின்ற மாதந்தான் நவம்பர் மாதம்.
இந்த நவம்பர் மாதத்திலே ஈழத்தமிழர் மாத்திரமன்றி உலகத் தமிழர்கள் அத்தனைபேரும் நவம்பர் மாதத்தை தியாகமானதாகவும், வீரமானதாகவும் வணக்கத்திற்குரிய மாதமாகவும் போற்றி வருகின்றார்கள். மாண்டுபோன மாவீரர்களின் நினைவுகளை தம் இனத்திற்கும், சந்ததியினருக்கும் அவர்கள் இரத்தத்திலே ஊற்றி வருகின்றனர்.
இந்த நவம்பர் மாதத்திலே உலகத் தமிழினம் எந்தவொரு இசை விழாக்களையும், களியாட்ட விழாக்களையும் கொண்டாடி மகிழ்வதில்லை.
இம்மாதத்தில் அனைத்துக் களியாட்ட விழாக்களையும் புறக்கணித்து புனிதமான மாவீரர்களைப் போற்றுகின்ற மாதமாகப் போற்றுகின்றது.
வஞ்சகமாக…
ஆனால், இலங்கை அரசாங்கம் இந்த மாவீரர்களின் மாதத்தை மறக்கடிக்க முயல்கிறது. துரோகிகளை பயன்படுத்தி களியாட்டங்களை நடத்தி வீரநிகழ்ச்சிகளை மறக்கடிக்க முயல்கிறது. இதற்காக தமிழ்திரைப்பட துறையே கூட வஞ்சகமாக அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கிறது.
இதற்காக கருணாவைப்போல், கே.பி யைப்போல் ஈழ தமிழர்களே சில துரோகிகளை பயன்படுத்தி தமிழ்திரைப்பட துறையை விலைபேச நினைக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சி அறியாமல் நமது கலைஞர்கள் கனடா நாட்டில் டோராண்டோ மாநகரில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி ஒரு கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்கள் என்ற அதிச்ச்சியான செய்தி இப்போது தெரியவந்துள்ளது.
இளையராஜா…
தமிழ்மண்ணிசையை உலகமெங்கும் எடுத்து சென்ற இசை மாமேதை இசைஞானி இளையராஜா அவர்கள் தலைமையில், இதுவரை ஈழப்போராட்டங்களை தலைமையேற்று நடத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உட்பட இளையராஜா யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, யேசுதாஸ், ஹரிஹரன், மனோ, விஜய் யேசுதாஸ், கார்த்திக், சித்ரா, பவதாரணி, சாதனா சர்கம் போன்ற இசைகலைஞர்களும், விவேக், கோபிநாத், சினேகா, பிரசன்னா போன்ற திரைக்கலைஞர்களும் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன் போன்ற மாபெரும் இயக்குநர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்தியை அறிந்தவுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களைத் தொடர்பு கொண்டபோது இந்நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து முன்னதாக அக்டோபர் மாதத்திலோ அல்லது தள்ளி டிசம்பர் மாதத்திலோ நடத்தபட்டால் கலந்துகொள்வேன். இல்லையேனில் கலந்து கொள்ள போவதில்லை என்று உறுதியளித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா டோராண்டோ நகரில் உள்ளதால் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. அவர் சென்னை திரும்பியபுடன் நேரடியாக சந்தித்து நவம்பர் மாதத்தில் நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.
மேலும் இந்நிகழ்சியில் கலந்து கொள்வதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கலைஞர்களிடமும் மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்வது என்னவெனில் தயவுகூர்ந்து அறிந்தோ அறியாமலோ இத்தகைய துரோகங்களுக்குத் துணை போகவேண்டாமெனவும், இவர்களையும் இவர்களின்
செயல்களையும் புறந்தள்ளுவதன் மூலம் நாம் ஒரு மானமுள்ள, கூடவே மனிதமுள்ள கலைஞர்கள் என தொடர்ந்து நிலைநாட்டுவோம்.
ஈகர்களின் புனித மாதமாம் நவம்பர். இனப்படுகொலைகளின் கொடுமை சுமக்கும் வலிதந்த மாதமாம் மே மாதம் எனும் இவ்விரு மாதங்கள் தவிர்ந்த ஏனைய மாதங்கள் பத்திலும் எவராவது எந்தவொரு களியாட்ட விழாக்களைச் செய்வதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லையென்பதனை மிகவும் வினயமாகத் தெரிவித்துக்கொள்கின்றேhம்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் என திரைப்பட துறையின் அனைத்துப் பிரிவினரும் இதுவரை அனைத்து ஈழதமிழர்களுக்கான அனைத்து போராட்டங்களிலும் தோளோடு தோள்நின்று போராடி வந்திருக்கின்றோம்.
ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய தமிழ் திரைப்படதுறை மாவீரர்களின் நினைவுகளை மறக்கடிக்க நினைக்கின்ற இலங்கை அரசின் இந்த சதிக்கு பலி ஆகிவிட கூடாது என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum