தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஷால் ஜோடியானார் அர்ஜுன் மகள்

Go down

விஷால் ஜோடியானார் அர்ஜுன் மகள் Empty விஷால் ஜோடியானார் அர்ஜுன் மகள்

Post  ishwarya Sat Mar 30, 2013 5:14 pm

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்க வருகிறார். விஷால் ஜோடியாக ‘பட்டத்து யானை’ படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். இவர் விஷால் நடித்த மலைக்கோட்டை படத்தை டைரக்டு செய்தவர்.

அர்ஜுன் மனைவி நிவேதிதா திருமணத்துக்கு பின் நடிப்பதை நிறுத்தி விட்டார். எனவே மகளை சினிமாவுக்கு கொண்டு வர அர்ஜுன் சம்மதிப்பாரா என்பதில் சந்தேகம் இருந்தது. ‘பட்டத்து யானை’ படத்தின் கதையை அர்ஜுன் படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் உருவாக்கி இருந்தார். இதில் அர்ஜுன் மகள் நாயகியாக நடித்தால் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் கருதினார். இதையடுத்து அர்ஜுனை அணுகி கதை சொன்னார்கள். அவருக்கு பிடித்தால் மகள் நடிக்க அனுமதி அளித்தார்.

படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இவர் நாடோடிகள் ஹிட் படத்தை தயாரித்தவர். அர்ஜுன் மகளுக்கு தற்போது நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நடிப்பு கல்லூரி ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum