தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘கோச்சடையான்’ படத்தில் ரஜினியுடன் நடித்தது இனிய அனுபவம்: தீபிகா படுகோனே

Go down

‘கோச்சடையான்’ படத்தில் ரஜினியுடன் நடித்தது இனிய அனுபவம்: தீபிகா படுகோனே Empty ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினியுடன் நடித்தது இனிய அனுபவம்: தீபிகா படுகோனே

Post  ishwarya Sat Mar 30, 2013 1:30 pm

ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த ‘கோச்சடையான்’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. டப்பிங், ரீரிக்கார்டிங் போன்ற இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத இனிய அனுபவம் என்றார் தீபிகா படுகோனே. அவர் மேலும் கூறும்போது :-

ரஜினி படப்பிடிப்பு அரங்குக்குள் நுழையும்போதே தெம்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார். தொழில் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பை அவரது கண்களிலேயே காண முடியும்.

உடல் நிலை பாதிக்கப்படுவதற்கு முன்பு எந்த அளவு ஈடுபாட்டுடன் இருந்தாரோ அதே அளவு ஈடுபாட்டுடன் இப்போதும் இருக்கிறார். அதில் கொஞ்சம்கூட குறையவில்லை.

‘கோச்சடையான்’ படத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளோம். இந்த படத்தில் நடித்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இந்தியாவில் இருந்து வெளியாகும் சர்வதேச படம் என்ற பெயரை ‘கோச்சடையான்’ பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

என்னைப் பற்றி வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் சம்பாதித்த பணத்தில் மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகி உள்ளேன். அந்த வீட்டை யாரோ எனக்கு பரிசாக தந்துள்ளதாக பேசுகிறார்கள். இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய வீட்டை வேறு ஒருவர் கொடுத்ததாக சொல்வது சரியல்ல. சினிமா உலகம் எப்படிப்பட்டது என்று தெரிந்துதான் இந்த தொழிலுக்கு வந்துள்ளேன்.

இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினியுடன் நடிக்க இந்தி படத்தில் இருந்து விலகலா?- தீபிகா படுகோனே பேட்டி
» ரஜினியுடன் நடித்த அனுபவம்… புல்லரிக்கும் தீபிகா படுகோன்
» “ராணா” படப்பிடிப்பு ஏற்பாடுகள் தீவிரம் ரஜினியுடன் நடிக்க தயாராகும் தீபிகா படுகோனே, இலியானா கதையில் மாற்றம்; ஆக்ஷன் காட்சிகள் குறைப்பு
» ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு 15-ந்தேதி தொடக்கம்: ரஜினி, தீபிகா படுகோனே காதல் காட்சிகள் படமாகிறது
» மேக்கப் பொருந்தவில்லை: தீபிகா படுகோனே மீது ரஜினி அதிருப்தி; “ரானா” படத்தில் இருந்து நீக்கப்படுவாரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum